ETV Bharat / bharat

Sikkim, Arunachal Pradesh Assembly Polls Live: 31/32 - சிக்கிம் பேரவைத் தேர்தலில் அசத்தும் ஆளுங்கட்சி! - Sikkim Arunachal Pradesh Assembly

Representational photo
Representational photo (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 9:11 AM IST

Updated : Jun 2, 2024, 5:34 PM IST

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக முடிவடைந்தது. இதனிடையே, சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. சிக்கிம் (32 தொகுதிகள்), அருணாச்சல பிரதேசம் (60 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், அருணாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே ஆளும் பாஜக, 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் 69.44 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், சிக்கிமில் 70.39 சதவீதமாக இருந்தது.

LIVE FEED

5:04 PM, 2 Jun 2024 (IST)

அருணாசலப் பிரதேசத்தில் பாஜக அசத்தல் வெற்றி!

அருணாசலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் அங்கு மொத்தமுள்ள 60 தொகுதிகளில், தற்போதைய நிலவரப்படி 46 இடங்களை பாஜக கைப்பற்றி உள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்களில் மாநில பொதுப் பணித் துறை அமைச்சர், சுற்றுலா துறை அமைச்சர் உள்ளிட்டோர் அடங்குவர். போன்ஞ்ச் வாக்கா தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் நகேன்டம், சுயேச்சை வேட்பாளர் ஹொலை வாங்சாவை 4,662 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தப்ரிஜோ தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தனியா சொக்கி, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான டிக்டோ இக்காரை 228 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார்.

4:13 PM, 2 Jun 2024 (IST)

31/32 - சிக்கிம் பேரவைத் தேர்தலில் அசத்தும் ஆளுங்கட்சி!

சிக்கிம் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது ஆளும், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா. பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரேயொரு தொகுதியி்ல் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங், ரிஹன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட மாநில முன்னாள் முதல்வர் பவன் சாம்லிங், இரண்டு இடங்களிலும் தோல்வியை தழுவி உள்ளார்.

1:14 PM, 2 Jun 2024 (IST)

சிக்கிமில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆளுங்கட்சி?

32 தொகுதிகளை கொண்ட சிக்கிம் சட்டமன்றத்தில் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றும் 13 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரேயொரு இடத்தில் மட்டும் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

1:07 PM, 2 Jun 2024 (IST)

அருணாசலப் பிரதேசத்தில் பாஜக வெற்றி முகம்!

அருணாசலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 23 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 23 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

10:54 AM, 2 Jun 2024 (IST)

சிக்கிமில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM), அருணாசலப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை!

சிக்கிம் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சமீபத்திய நிலவரப்படி, அங்கு மொத்தமுள்ள 32 இடங்களில் ஆளுங்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 29 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதேபோன்று, அருணாசலப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 41 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

9:19 AM, 2 Jun 2024 (IST)

சிக்கிமிலும், அருணாச்சலப் பிரதேசத்திலும் பாஜக முன்னிலை

இதில், அருணாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே ஆளும் பாஜக, 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் 69.44 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், சிக்கிமில் 70.39 சதவீதமாக இருந்தது.

Last Updated : Jun 2, 2024, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.