டெல்லி : இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தார். அதற்கு முன் மற்றொரு தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றார். தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் சுக்லா மற்றும் தனி ஒரு ஆளாக எதிர்வரும் மக்களவை தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், மார்ச் 15ஆம் தேதிக்கு இரண்டு புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை தேர்தல் ஆனையர் பதவியை அருண் கோயல் ராஜினாமா செய்தர். ஏற்கனவே தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி 65 வயதை கடந்த நிலையில் ஓய்வு பெற்றார்.
இரண்டு தேர்தல் ஆணையர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில், தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சுக்லா மட்டும் பணியில் உள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், உள்துறை செயலர் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலர் ஆகியோரைக் கொண்ட ஒரு தேடல் குழு முதலில் இரண்டு பதவிகளுக்கும் தலா ஐந்து பெயர்களைக் கொண்ட இரண்டு தனித்தனி பேனல்களை தயாரிக்க உள்ளன.