ETV Bharat / bharat

'இந்தில பேசு, இல்லன்னா கேஸ் போடுவேன்'.. மராத்தி தம்பதியை மிரட்டிய டிக்கெட் செக்கர் சஸ்பெண்ட்..! - MUMBAI TICKET CHECKER SUSPENDED

மராத்தி பயணியிடம் இந்தி பேச வற்புறுத்தி மிரட்டியதாக, மஹாராஷ்டிரா புறநகர் ரயிலின் டிக்கெட் பரிசோதகர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மராத்தி ஏகிகரன் சமிதி தொழிலாளர்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
மராத்தி ஏகிகரன் சமிதி தொழிலாளர்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை (credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 10:26 AM IST

Updated : Nov 6, 2024, 10:41 AM IST

நலசோபரா: ''இந்தியராக இருந்தால் இந்திதான் பேச வேண்டும்'' என்று மராத்தி பேசிய பயணியை கட்டாயப்படுத்திய மும்பை டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நலசோபரா புறநகர் ரயிலில் பயணி ஒருவர் கடந்த திங்கள்கிழமை அன்று தனது குடும்பத்துடன் பயணம் செய்தார். அப்போது, டிக்கெட் பரிசோதகர் ரித்தேஷ் குமார் மவுரியா, அந்த பயணியிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட போது இந்தியில் பேசியுள்ளார்.

ஆனால், அந்த பயணி மராத்தியில் பதில் அளித்துள்ளார். இதனால், டிக்கெட் பரிசோதகர் அந்த பயணியிடம், ''இந்தி தெரியாதா? நீங்கள் இந்தியராக இருந்தால், இந்தி பேச வேண்டும், மராத்தி பேசினால், நான் உங்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்வேன்" என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொலை!

மேலும், டிக்கெட் பரிசோதகரின் இந்த அடாவடி தனத்தை பயணியின் மனைவி செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் ரித்தேஷ் குமார், அந்த பெண்ணிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், மேற்கு ரயில்வேயில் பணிபுரியும் மகாராஷ்டிர ஆதரவு அமைப்பான மகாராஷ்டிரா ஏகிகரன் சமிதி (எம்இஎஸ்) தொழிலாளர்கள் டிக்கெட் பரிசோதகர் ரித்தேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நலசோபரா ரயில்வே அலுவலகத்தில் மூன்று மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், டிக்கெட் பரிசோதகர் ரித்தேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்ததோடு, அவரது சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வை நிறுத்தி, விசாரணைக்கு உத்தரவிட்டனர். அத்துடன், ரித்தேஷ் குமார் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதனை வரவேற்ற மகாராஷ்டிரா ஏகிகரன் சமிதி தொழிலாளர்கள் அமைப்பு தங்களது வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்றது.

இச்சம்பவத்தை அடுத்து மேற்கு ரயில்வே தமது எக்ஸ் தள பக்கத்தில், '' மேற்கு ரயில்வே, நாட்டின் அனைத்து மொழிகளையும், பயணிகளையும் மதிக்கிறது மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையை பேணுகிறது " என்று குறிப்பிட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Nov 6, 2024, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.