ETV Bharat / state

வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரம்; 11 பேர் பணியிடை நீக்கம்! - VELLORE JAIL PRISONER CASE

வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட சம்பவத்தில் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மத்திய சிறை
வேலூர் மத்திய சிறை (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 3:03 PM IST

வேலூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (30). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.யின் வீட்டு வேலைக்காக சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அவர் வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறி சிறை வார்டன்கள், காவலர்கள் சேர்ந்து சிவக்குமாரை தனி அறையில் அடைத்து சித்திரவதை செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர். அதன்பேரில் வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜலட்சுமி, வேலூர் சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள் குமரன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: போலீசாரை பேனா கத்தியால் தாக்கியவர் மாவு கட்டுடன் கைது..! புதுச்சேரிக்கு சென்று தூக்கிய போலீஸ்!

அதன் பின் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே வேலூர் சரக டி.ஐ.ஜி. ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கும், ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் சென்னை புழல் சிறைக்கும் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அங்கு பணியாற்றிய பரசுராமன் வேலூர் ஜெயில் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 21-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், அக்டோபர் 22ம் தேதி வேலூர் சரக முன்னாள் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள் குமரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், டி.ஐ.ஜி ராஜலட்சுமியின் பெர்சனல் செகரட்டரி ராஜு, கான்ஸ்டபிள்கள் ரசீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்ச்செல்வன், விஜி மற்றும் சிறை வார்டன்கள் சுரேஷ், சேது, மற்றும் பெண் கான்ஸ்டபிள் செல்வி ஆகிய 11 பேர் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.