தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருட வந்த இடத்தில் குடித்த தண்ணீருக்கு பணம் வைத்த கொள்ளையன்! சிசிடிவி முன் கூறியது என்ன? - Telangana Hotel Theft viral video - TELANGANA HOTEL THEFT VIRAL VIDEO

தெலங்கானாவில் திருட வந்த கிடையில் எதுவும் கிடைக்காத விரக்தியில் குடித்த தண்ணீருக்கு 20 ரூபாய் பணம் வைத்து திருடன் சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Representational Photo (Pexel)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 12:41 PM IST

ஐதராபாத்:தெலங்கானா மாநிலம் ரங்க ரெட்டி மாவட்டத்தில் உள்ள உணவகத்தின் பூட்டை உடைத்து கொள்ளையன் திருட முயன்று உள்ளார். முககவசம், தொப்பி, கையுறை என பக்கா திருட்டு பிளானுடன் உணவகத்தின் முன்பக்க பூட்டை உடைத்த திருடன், கடையின் கல்லா பெட்டி முதல் மிக்சி, கிரைண்டர், சமையல் பாத்திரங்கள் என பலவற்றை கொள்ளையடித்துச் செல்லும் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் கொள்ளையனுக்கு பேரதிர்ச்சியாக கடையில் எந்த பொருட்களும் இல்லாதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. கடை முழுவதும் சோதனையிட்ட திருடனுக்கு ஒன்று அகப்படவில்லை. இதனால் கடுப்பான திருடன் கடையில் உள்ள குளிர்சாதன பெட்டியை திறந்து அதில் தண்ணீர் பாட்டில் ஒன்றை எடுத்து குடித்துள்ளான்.

தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிரா முன் தனக்கு நிகழ்ந்ததை கூறி வருத்தப்பட்ட திருடன், கடையின் அவல நிலையை கண்டு மனம் வருந்தி குடித்த தண்ணீருக்கு 20 ரூபாய் பணத்தை வைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது. திருடனின் நேர்மை குணத்தை பார்த்து நெட்டிசன்கள் கலவையான கமென்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஜம்முவில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை! தொடரும் துப்பாக்கிச் சூடுகள்! என்ன காரணம்? - Pakistan terrorist killed

ABOUT THE AUTHOR

...view details