திருச்சி:கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா பயணம் சென்றார். அங்கு பேசிய அவர் ‘இந்தியா அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால், இங்கு இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் யோசிக்கும்’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநில பொதுச் செயலாளர் சரவணன் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் சரவணன், “கடந்த செப்.17ஆம் தேதி அன்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெயிக்வாட், ராகுலின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்குவேன் என்று கொலைமிரட்டல் விடுத்துள்ளதாவும். ராகுல்தான் நாட்டின் முதல் தீவிரவாதி என்று வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், ராகுல் தேசிய விரோதி என்றும் தரக்குறைவாக பேசியதாவும் அதற்கு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.