தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குழந்தை திருமணத்தை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு தேவை - சுப்ரீம் கோர்ட் நீதிபதி அறிவுரை!

குழந்தை திருமணத்திற்கு (PCMA) எதிரான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் வகுத்துள்ளனர்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம் (IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 9:02 AM IST

Updated : Oct 19, 2024, 11:36 AM IST

புதுடெல்லி: குழந்தைகள் திருமணத்துக்கு எதிரான சட்ட வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வகுத்துள்ள வழிகாட்டுதல்களில், குழந்தை நிச்சயதார்த்தத்தை சட்ட விரோதமாக்குவது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்கலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

குழந்தை திருமணம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் கூறியதாவது, "ஒரு பெண் குழந்தை பருவத்தில் திருமணம் செய்து கொள்ளும்போது, ​அவரது ​மூளை வளர்ச்சியின் முக்கிய காலகட்டத்தில் கல்வி தடை செய்யப்படுகிறது, மேலும் திருமணத்தின் போது ஒரு பெண்ணின் வயது, அவரது கல்வியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

குழந்தை திருமணத்தின் நிகழ்வில், ஒரு நபரின் பாலுறவுக்கான உரிமை திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே குழந்தை பாலியல் ரீதியாகத் தாக்கப்படுவதிலிருந்து தாக்குதல் தொடங்குகிறது என குறிப்பிட்டார்.

மேலும், பெண்கள் தங்கள் 'கற்பு' மற்றும் 'கற்புரிமை' ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக திருமணத்திற்குத் தள்ளப்பட்டால், அவரது பாலியல் உரிமை, உடல் சுயாட்சி மற்றும் தனக்குத் தேவையானதைத் தானே தேர்வு செய்யும் சுதந்திரம் ஆகியவை மறுக்கப்படுகின்றன எனவும் கூறினார்.

இதையும் படிங்க:அமைச்சரவை அல்லது சட்டமன்றம் நிறைவேற்றும் தீர்மானங்கள் மத்திய அரசை கட்டுப்படுத்தாதது ஏன்?

உச்ச நீதிமன்ற அமர்வு இது தொடர்பாக 141 பக்கம்கொண்ட தீர்ப்பை எழுதியுள்ளது. ஆர்டிக்கள் 16(1)(b) இன் படி, பெண்கள் திருமணம் குறித்த பொறுப்புகள் மற்றும் அறிவாற்றலை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அதேவேளையில், பெண்கள் முழு சுதந்திரத்துடன் அவர்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டிய உரிமை காக்கப்பட வேண்டும்.

பல்வேறு குழந்தை திருமணங்கள் நிறுத்தப்படடும்போது, நிச்சயதார்த்தம் கூட நடக்கவில்லை என தெரிய வருகிறது. குழந்தைகள் திருமணத்தில் பெண்கள் வளரும் முன்பாகவே அவர்களது துணையை தேர்வு செய்யும் உரிமை, சுதந்திரம் ஆகியவை மீறப்படுகின்றன. குழந்தை திருமணம் என்பது அனைத்து பாலினத்திற்கும் பொருந்தும். அத்துடன், கல்வி, பாலியல் உரிமை, மற்றும் வாழ்க்கையை மேம்படுத்துதல் ஆகியவை குழந்தைப்பருவத்திற்கான உரிமையில் ஒருங்கிணைந்துள்ளது.

குழந்தை திருமணங்கள் நாட்டின் கல்வி, சுகாதாரம் மற்றும் சுயாட்சி உரிமைகளை பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிமன்றம், கல்வியறிவு இல்லாமை, பாலின பாகுபாடு ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் பெண்களை அப்பட்டமாக பாதிக்கிறது என தெரிவித்தது.

குழந்தை திருமணம் ஒரு சமூகத் தீமை ஆகும். குழந்தை திருமணத்தின் விளைவுகள் குறித்து உலகளாவிய ஒப்பந்தம் இருந்தபோதிலும், அதன் ஆணையம் நிதானமாகவே உள்ளது.

குழந்தைத் திருமணங்களை முழுமையாக ஒழிப்பதை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றம் சில வாழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. அதன்படி, சட்டத்தை அமலாக்குவது, சமூக ஈடுபாடு வேண்டும், தேவையான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கல்வி மற்றும் சமூக ஆதரவு, கண்காணித்தல், பொறுப்புக்கூறல், குழந்தை திருமணத்தை குறித்து புகாரளிப்பதற்கான தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகள் உள்ளிட்ட வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 19, 2024, 11:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details