தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பீகார் இடஒதுக்கீடு ரத்து; உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுப்பு! - Bihar quota bill - BIHAR QUOTA BILL

Bihar Reservation: பீகார் அரசின் 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடு மசோதாவை ரத்து செய்ததற்கு எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில், உயர் நீதிமன்றத்தின் ரத்து உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By PTI

Published : Jul 29, 2024, 5:38 PM IST

பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் நிதீஷ் குமார் அரசால், வேலைவாய்ப்பு மற்றும் சேவைகளில் பீகார் இடஒதுக்கீடு திருத்த மசோதா 2023, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு 2023 ஆகிய திருத்தச் சட்டங்கள் அம்மாநில அவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. பின்னர், இதனை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், இந்த திருத்தச் சட்ட மசோதாக்கள் சட்டத்தில் உள்ள தீமை மற்றும் சமஉரிமையை பாதிக்கிறது என முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணையின் முடிவில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தியதை ரத்து செய்து பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர், இதனை எதிர்த்து பீகார் அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்டிவாலா மற்றும் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்களையும் ஏற்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

இதையும் படிங்க:நிதி ஆயோக் வளர்ச்சிக் குறியீடு அறிக்கை வெளியீடு - தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

மேலும், எந்த தரப்புக்கும் நோட்டீஸ் ஏதும் அனுப்பச் சொல்லாமல், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணையை செப்டம்பர் மாதத்திற்கு பட்டியலிடுமாறு நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. அப்போது, இதேபோன்ற சத்தீஸ்கர் மாநில வழக்கின் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை பீகார் அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, “நாங்கள் இந்த விவகாரத்தை பட்டியலிடக் கூறியுள்ளோம். ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எந்தவித இடைக்கால தடையும் அளிக்க முடியாது. அதேநேரம், தற்போதைய சூழலில் இடைக்கால நிவாரணமும் அளிக்க முடியாது” என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். முன்னதாக, கடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையிலே இந்த திருத்தச் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tami Nadu)

இதையும் படிங்க:மகாராஷ்டிரா சபாநாயகரின் உண்மையான NCP அறிவிப்பு; அஜித் பவார் தரப்பு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details