திரிபுரா: திரிபுரா மாநிலத்தில் 828 மாணவர்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அண்மையில் வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், திரிபுராவில் அண்மைக்காலமாக மாணவர்கள் மத்தியில் போதை ஊசி கலாச்சாரம் அதிகமாகி, அதன் மூலம் மாணவர்களுக்கு எய்ட்ஸ் பரவியதாகவும் சொல்லப்பட்டது.
எனவே, இது அண்மையில் கண்டறியப்பட்ட தகவலாக கசிந்து, சோஷியல் மீடியாவிலும், செய்திகளிலும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து திரிபுராவின் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில், திரிபுராவில் 828 மாணவர்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டதும், அதில் 47 பேர் உயிரிழந்திருப்பது உண்மைதான். ஆனால், அது ஏப்ரல் 2007 முதல் மே 2024 வரையிலான புள்ளி விவரம் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.