தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பியில் ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 8 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழப்பு! - Kasganj Tractor accident

UP Tractor accident: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏரியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் இதுவரை 8 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 12:58 PM IST

கஸ்கன்ஜ்:உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கன்ஜ் மாவட்டத்தில், இன்று பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருடன் சென்ற டிராக்டர் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், இவர்கள் மகா பூர்ணிமாவை முன்னிட்டு கங்கைக்கு புனித நீராட பயணம் மேற்கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உத்தரவிட்டு உள்ளதாகவும் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details