டெல்லி:முறைகேடாக வழங்கப்பட்ட சாதி சான்றிதழின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டு பிரிவை சேர்ந்த மாணவர் தொடர்பான விசாராணையை உடனடியாக சிபிஐ-க்கும் மாற்றுவதாக தனி நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயாவின் ஒற்றை பெஞ்சின் உத்தரவை சட்டவிரோதமானது என தெரிவித்த கல்கத்தா நீதிமன்றம் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தது.
இதனால், மேற்கு வங்கத்தில் எம்பிபிஎஸ் சேர்க்கையில் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு நீதிபதி கங்கோபாத்யாயாவின் உத்தரவுக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் விதித்த இந்த உத்தரவால் இவ்வழக்கில் தொய்வு ஏற்பட்டது. தலைமை நீதிபதி நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யா காந்த் மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு 24.01.2024 மற்றும் 25.01.2024 தேதிகளில் கல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் தொடர் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்ததோடு, இவ்வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
முன்னதாக, தனி நீதிபதியின் உத்தரவு சட்டவிரோதமானது என கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கங்கோபாத்யாய் ஜன.25 அன்று கூறியிருந்தார். இவ்வழக்கில் நீதிபதி சௌமென் சென் தலைமையில் நீதிபதி உதய்குமார் ஆகியோர் அடங்கிய தனி நீதிபதி விசாரணை செய்தார். ஜன.24-ல் இவ்விசாரணையின் போது, இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்குமாறு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து கல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, மாநில அரசு தனது சொந்த விசாரணையில் இவ்வழக்கை முடிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டது.
இது தொடர்பாக நீதிபதி கங்கோபாத்யாய், 'தனி நீதிபதியின் உத்தரவில் இருந்து, அது தடை செய்யப்பட்டபோது, மேல்முறையீட்டு மனுவோ அல்லது நீதிமன்றத்தின் முன் தடை விதிக்கப்பட்ட உத்தரவுகளோ எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது' .மேலும், 'இம்மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக தனது தனிப்பட்ட நலன்களை கருத்தில் கொண்டு' செய்யப்பட்டதாக நீதிபதி சென் 'தவறான முறையில்' உத்தரவு பிறப்பித்தகாக குற்றம்சாட்டினார்.