தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோயில் இடத்தில் மசூதி.? உ.பி. சம்பல் கலவரத்தில் 4 பேர் பலி.. மாவட்டத்துக்குள் வெளி ஆட்கள் வர தடை..! - UP SAMBHAL VIOLENCE

சம்பல் மாவட்டத்தில் மசூதி ஆய்வின்போது வெடித்த வன்முறையில் நான்கு பேர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக இன்று மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை
வன்முறையை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை (credit - PTI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 1:20 PM IST

சம்பல்:உத்தர பிரதேசம் மாநிலத்தில் சம்பல் மாவட்டத்தில் முகலாயர் கால ஜமா மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி அமைக்கப்படுவதற்கு முன்பு அங்கு ஹரிஹர் என்ற இந்து கோயில் இருந்ததாகவும், அந்த கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டிருப்பதாகவும் கூறி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதனை விசாரித்த நீதிமன்றம், மசூதி உள்ள இடத்தை ஆய்வு செய்யவும், அதற்கான குழு அமைத்தும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்று மசூதியை ஆய்வு செய்யவந்தபோது மசூதிக்கு அருகே ஏராளமானோர் கூடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி காவல்துறையினர் மீது கல் வீசி தாக்கினர். மேலும், அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். அதனை சமாளிக்க போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முற்பட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த மோதலில், 4 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:உ.பி.யில் அதிகாலை நடந்த கார் விபத்து; நான்கு பெண்கள் உட்பட 5 பேர் பலி..!

இச்சம்பவம் குறித்து மொராதாபாத் காவல்துறை அதிகாரி அனுஜமேய குமார் சிங், போராட்டத்தில் நயீம், பிலால் மற்றும் நௌமன் ஆகிய மூன்று பேரில் இருவர் நாட்டு கைத்துப்பாக்கிகளின் குண்டுகளால் கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது மரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும் என்றார். மேலும், இந்த வன்முறையில், 15 முதல் 20 காவலர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 2 பெண்கள் உட்பட 21 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவார்கள் என்று அனுஜமேய குமார் சிங் கூறினார்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், நவம்பர் 30 வரை காவல்துறையின் அனுமதியின்றி வெளியாட்களோ, பிற சமூக அமைப்புகளோ, மக்கள் பிரதிநிதிகளோ மாவட்ட எல்லைக்குள் நுழைய கூடாது என மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜேந்தர் பென்சியா உத்தரவிட்டுள்ளார்.

மாட்டார்கள்" என்று பென்சியா கூறினார். மீறினால் பிஎன்எஸ் பிரிவு 223ன் கீழ் தண்டிக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும், போராட்டம் நடந்த பகுதிகளில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details