தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பதில்லை": பட்டாசு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

மாசுபாடில்லாத சூழலில் வசிப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Etv Bharat
தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு டெல்லி நகரில் காற்று மாசுவின் நிலை (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2024, 5:52 PM IST

டெல்லி:தலைநகரை உலுக்கும் காற்று மாசு தொடர்பான வழக்கில் திங்கட் கிழமை தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "அரசியலமைப்பு சட்ட அட்டவணை 21ன் கீழ் மாசற்ற சூழலில் வசிப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை" என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் "எந்த மதமும் காற்று மாசுவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில்லை" எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அமலாக்கத் தவறிய அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் அமர்வில் விசாரிக்கப்பட்டது. உத்தரவை வாசித்த நீதிபதி அபய் "மாசற்ற சுற்றுச்சூழலில் வாழ்வது என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை, இது அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை 21ன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார். முகாந்திரமாக எந்த மதமும் காற்று மாசுவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதில்லை என தாங்கள் கருதுவதாகவும் நீதிபதிகள் கூறினர். இத்தகைய வகையில் பட்டாசுகள் வெடிப்பது ஆரோக்கியமாக வாழ்வ்தற்கான குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதிப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆண்டு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறியதை நீதிபதிகள் குறிப்பிட்டனர். அத்தோடு"டெல்லி மாநில அரசு நவம்பர் 25ம் தேதிக்கு முன்னதாக சரியான முடிவை எடுக்க வேண்டும். டெல்லி காவல் ஆணையர் அரசின் உத்தரவுகளை அமல்படுத்த பயன்தரு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெல்லி காவல் ஆணையர் சார்பில் ஒரு பிரமாணப்பத்திரம் நவம்பர் 25ம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும், இந்த ஆவணத்தில் பட்டாசு தடையை அமல்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்க வேண்டும்" என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நேஷனல் கேபிடல் ரீஜியன் எனப்படும் டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், பட்டாசு உற்பத்தி, இருப்பு வைப்பு, விற்பனை மற்றும் தடையை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் நவம்பர் 25ம் தேதிக்குள் இந்த மாநிலங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி காற்று மாசு விவகாரத்தில் தொடர்புடைய மற்றொரு வழக்காக, டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் நெற்த்தட்டைகளை எரிப்பது தொடர்பான வழக்கையும் விசாரிக்கும் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையின் போது வாய் மொழியாகக் கூறிய நீதிபதிகள் பட்டாசு வெடிப்பத ஆர்ட்டிக்கிள் 21ன் கீழ் அடிப்படை உரிமை என யாரேனும் வாதிடுவார்களேயானால், அந்த நபர் நீதிமன்றத்திற்கு வரட்டும் எனவும் கூறினர். தீபாவளி மட்டுமின்றி வேறு சில பண்டிகைகளின் போதும் பட்டாசு வெடிப்பதை அரசு வழக்கறிஞர் குறிப்பிட்ட நிலையில், தீபாவளிக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

டெல்லி அரசு தசராவுக்கு (அக்டோபர் 14 ) இரண்டு நாட்கள் பிறகே உத்தரவு பிறப்பித்ததாகவும், இதற்கு முன்பு வரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் கூறினர். எப்போதிருந்து பட்டாசுக்கடைகளுக்கான உரிமங்கள் வழங்கினீர்கள் என்ற கேள்விக்கு தடைக்கு முன்பு உரிமங்கள் வழங்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

பட்டாசு தடையைப் பொறுத்தவரையிலும் டெல்லியில் இதனை அமல்படுத்துவது போலீசாரின் கைகளில் தான் உள்ளது என்பதை குறிப்பிட்ட நீதிபதிகள், அக்டோபர் 14ம் தேதி வரையிலும் பட்டாசு தடைக்கு தாமதம் செய்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். இதற்கு முன்பாகவே பலர் பட்டாசுகளை வாங்கி இருப்பு வைத்திருக்கக் கூடும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

ABOUT THE AUTHOR

...view details