தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பூனம் பாண்டே மரணம் உண்மையா? விடை தெரியாத கேள்விகள்!

poonam pandey death reason: பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (வயது 32) கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் மரணமடைந்தார் என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்தும் வழக்கம் கொண்ட பூனம் பாண்டேவைப் போன்றே இந்த அறிவிப்பும் விடை தெரியாத பல கேள்விகளை சுமந்து கொண்டுள்ளது.

poonam pandey
பூனம் பாண்டே

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 11:13 AM IST

ஐதராபாத்: கடந்த 2011ஆம் ஆண்டுக்கு முன்பு, பூனம் பாண்டே என்ற பெயர் அவ்வளவு பிரபலமாகியிருக்க வாய்ப்பில்லை. அப்போது நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் என கூறியிருந்தது பரபரப்பை பற்ற வைத்தது.

இப்படி சர்ச்சையால் துவங்கிய புகழ், தற்போது வரை பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமலேயே நகர்கிறது. நேற்று (02.02.2024) பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக, அவர் மரணமடைந்ததாக அறிவிப்பு ஒன்று வெளியானது. இதனை நடிகையின் மேலாளர் நிகிதா சர்மா உறுதி செய்ததாகவும் சில ஊடகங்கள் கூறின.

ஆனால் பூனம் பாண்டே மரணத்தில் உறுதிப்படுத்த முடியாத சில பல கேள்விகள் எழுந்துள்ளன.

1. மரணமடைந்தார் என்றால் எந்த மருத்துவமனையில் மரணமடைந்தார்?

2. மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிக்கை எங்கே?

3. நடிகையின் உடல் எங்கே வைக்கப்பட்டுள்ளது?

4. பூனம் பாண்டே மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் அல்லது உறவினரோ இது குறித்து செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை.

5. குடும்ப உறுப்பினர்கள் அவரது மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்து உள்ளனர்.

இவை மட்டுமின்றி காலமானதாக கூறப்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்னால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் செயலில் இருந்துள்ளது. ஆரோக்கியமான நிலையில் அவரது புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆரோக்கியமான நிலையில் இருக்கும் ஒரு நபர் திடீரென 5 நாட்களில் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் மரணமடைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விகளுடன் சென்னை புற்று நோய் சிகிச்சை நிபுணரான மருத்துவரை அணுகினோம்.

இது குறித்து விளக்கம் அளித்த அவர், "சர்விகல் புற்றுநோய் கர்ப்பப்பை வாய் பகுதியில் இருந்தால் அதனை முன் கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் போது, உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. நோயானது மூன்று அல்லது நான்காம் நிலையில் கண்டறிந்தாலும், அதற்குரிய தொடர் சிகிச்சை அளிக்கும் போது எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

புற்றுநோய் மேலும் வளர்ந்து நுரையீரல் மற்றும் இடுப்பு பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தினாலும், முழுவதுமாக சிகிச்சை மேற்கொண்டால் உடனடியாக இறக்க மாட்டார்கள். ஆனால் நோய்க்கான சிகிச்சை முறையாக எடுத்தாரா என்பது தெரியாமல் அது குறித்து கூற முடியாது. புற்றுநோய் உடன் இணை நோய் ஏதாவது இருந்திருந்தால் உடனடியாக இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என பிப்ரவரி 1ஆம் தேதி தனது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதற்கு அடுத்த நாள் பூனம் பாண்டே இதே நோயால் மரணமடைந்ததாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பூனம் பாண்டே மாடலிங் துறையில் பிரபலமானவர். நிஷா என்ற திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி இந்தி கன்னடம், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கங்கா ரனாவத் நடத்திய ரியாலிட்டி ஷோவான லாக் அப் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு தனது காதலன் சாம் பாம்பெயை திருமணம் செய்து கொண்டு சில மாதங்களில் விவாகரத்தும் பெற்றார். குடும்ப வன்முறை என இவர் புகார் அளித்ததும் ஊடகங்களின் கவனத்தை பெற்றது. பூனம் பாண்டே சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நபர். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடையில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவருபவர்.

இதையும் படிங்க: பெண்களை மிரட்டும் கருப்பை வாய்ப் புற்றுநோய்.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details