ஐதராபாத் : திரைத் துறையில் சாதிக்கத் துடிக்கும் நபரா நீங்கள்?. ஐதராபாத்தை சேர்ந்த பிரபல சுற்றுலா நிறுவனமான ராமோஜி குழுமத்தின், டிஜிட்டல் பிலிம் அகாடமியான ராமோஜி அகாடமி ஆப் மூவிசில் இலவச பிலிம் மேக்கிங் பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இந்த பிலிம் மேக்கிங் பயிற்சிகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பங்களா, மராத்தி, இந்தி ஆகிய 7 இந்திய மொழிகள் தவிர ஆங்கிலத்திலும் கற்றுத் தரப்படுகிறது. கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, தயாரிப்பு, பிலிம் எடிட்டிங் மற்றும் டிஜிட்டல் \பிலிம் மேக்கிங் உள்ளிட்டவைகள் இந்த பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படுகின்றன.
இலவச பாடங்கள்:
திரைப்பட தயாரிப்பு, உருவாக்கம் உள்ளிட்ட பணிகளில் விருப்பம் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் பிராந்திய மொழிகளில் முற்றிலும் இலவசமாக பாடத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், உயர் தர திரைப்பட தயாரிப்பு, உருவாக்கம் உள்ளிட்ட பணிகளை எளிதாக அணுகுவது குறித்தும் பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படுகின்றன.
புதுமையான மற்றும் மதிப்புமிக்க நிகழ்வுகள் :
பிராந்திய மற்றும் கலாசாரம் சார்ந்த பிலிம் மேக்கிங் நுணக்கங்களை அந்தந்த மொழிகளில் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுத் தருவது. மேலும் மாணவர்கள் கலாசார சூழல் மற்றும் பிராந்தியத்திற்கு ஏற்ற வகையில் தனித்துவமான கருப்பொருள்களில் கதை சொல்வது, கற்றல் செயல்முறை மற்றும் தகவல் உள்வாங்கள் ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கு சிறந்த பாடநெறிகள் இந்த பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும்.