தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போர்வெல் குழிக்குள் இருந்து 10 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு! - RAJASTHAN BOREWELL TRAGEDY

ராஜஸ்தானின் கிராத்பூர் கிராமத்தில் உள்ள போர்வெல் குழியில் விழுந்த சேத்னா என்ற சிறுமி 10 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை மீட்ப்பதற்காக நடைபெற்ற மீட்பு பணிகள்
சிறுமியை மீட்ப்பதற்காக நடைபெற்ற மீட்பு பணிகள் (Image credits-Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2025, 8:28 PM IST

கோட்புட்ல்(ராஜஸ்தான்):ராஜஸ்தானின் கிராத்பூர் கிராமத்தில் உள்ள போர்வெல் குழியில் விழுந்த சேத்னா என்ற சிறுமி 10 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய உதவி காவல் ஆய்வாளர் மகாவீர் சிங்,"150 அடி ஆழ போர்வெல் குழியில் இருந்து சிறுமி சேத்னா மீட்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 23ஆம் தேதி போர்வெல் குழியில் விழுந்த அவரை மீட்க தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தன. 10ஆவது நாளான இன்று அவர் மீட்கப்பட்டுள்ளார்,"என்று கூறினார்.

மீட்கப்பட்ட சிறுமியை மாவட்ட பிடிஎம் மருத்துவமனைக்கு தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் உடனடியாக கொண்டு சென்றனர். மேலும் இது குறித்துப் பேசிய கோட்புட்லி பெஹ்ரோர் ஆட்சியர் கல்பனா அகர்வால்," போர்வெல் குழியில் விழுந்திருந்த சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவர்களின் ஆய்வுக்குப் பின்னரே அந்த சிறுமியின் உடல் நிலை குறித்து கூற முடியும்," என்றார். இந்த நிலையில் சிறுமி சேத்னா 10 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், சிறுமியின் பெற்றோர் மட்டுமின்றி ஒட்டு மொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதையும் படிங்க:அமெரிக்காவில் புத்தாண்டில் நடந்த தீவிரவாத தாக்குதல்?-10 பேர் பலி!

கிராத்பூர் கிராமத்தில் வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எதிர்பாரத விதமாக அங்கிருந்த மூடப்படாத போர்வெல் குழியில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு விழுந்தார். சிறுமியை மீட்பதற்காக உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

தேசிய பேரிடர் மேலாண்மை படை, மாநில பேரிடர் மேலாண்மை படை, உள்ளூர் நிர்வாகம் ஆகியவற்றை சேர்ந்தோர் இரவு பகலாக சிறுமியை பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். முதலில் இரும்பு கம்பியை குழியில் செலுத்தி அதனை பிடித்தபடி குழந்தையை மீட்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். இதையடுத்து போர்வெல் குழிக்கு அருகே குழி தோண்டும் பணி நடைபெற்றது.

மீட்பு பணிகுறித்து பேசிய கோட்புட்ல் சப்டிவிஷனல் மாஜிஸ்திரேட் பிரிஜேஸ் சவுத்ரி, "போர்வெல் குழிக்குள் 15 இரும்பு கம்பிகள் உள்ளே செலுத்தப்பட்டு சிறுமியை மீட்க முயற்சிகள் நடைபெற்றன. 150 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுமி 30 அடி வரை மேலே தூக்கப்பட்டுள்ளார். நிலத்தை துளையிடும் இயந்திரம் ஃபரிதாபாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி குழி தோண்டப்பட்டு குழந்தை விரைவில் மீட்கப்படுவார். குழந்தையை உயிரோடு மீட்பதே மீட்பு குழுவின் முதன்மையான நோக்கமாக உள்ளது," என்று கூறியிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details