தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: முதல்வர் தொகுதி உட்பட 37 தொகுதிகளுக்கு இன்று கடைசி கட்ட வாக்கு பதிவு!

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு இன்று நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 2-ம் கட்ட வாக்கு பதிவில் 12.71% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜார்க்கண்ட் இறுதிக் கட்ட வாக்கு பதிவு
ஜார்க்கண்ட் இறுதிக் கட்ட வாக்கு பதிவு (credit - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நவம்பர் 13 ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு நடந்தது. அதனை தொடர்ந்து இன்று (நவ.20) இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 12.71% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில், பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், ஜேஎம்எம் கட்சிகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் (பர்ஹைத் தொகுதி), அவரது மனைவி கல்பனா சோரன் (ஜேஎம்எம்), எதிர்க்கட்சித் தலைவர் அமர் குமார் பவுரி (பாஜக) ஆகியோர் இந்த இரண்டாம் கட்ட தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.

முதல் கட்டம்

முதல் கட்டமாக நவம்பர் 13 ஆம் தேதி, கோடர்மா, பர்கதா, பர்கி, பர்ககான், ஹசாரிபாக் சிமாரியா (எஸ்சி), சத்ரா (எஸ்சி), பஹரகோரா, காட்சிலா (எஸ்டி), பொட்கா (எஸ்டி), ஜுக்சலை (எஸ்சி), ஜாம்ஷெட்பூர் கிழக்கு, ஜாம்ஷெட்பூர் மேற்கு, இச்சாகர், செரைகெல்லா (எஸ்டி), சாய்பாசா (எஸ்டி), மஜ்கான் (எஸ்டி), ஜகநாத்பூர் (எஸ்டி), மனோகர்பூர் (எஸ்டி), சக்ரதர்பூர் (எஸ்டி), கர்சவான் (எஸ்டி), கர்சவான் (எஸ்டி), தாமர் (எஸ்டி), டோர்பா (எஸ்டி), குந்தி (எஸ்டி), ராஞ்சி, ஹதியா, காங்கே (எஸ்சி), மந்தர் (எஸ்டி), சிசாய் (எஸ்டி), கும்லா (எஸ்டி) பிஷுன்பூர் (எஸ்டி), சிம்தேகா (எஸ்டி), கோலேபிரா (எஸ்டி), லோஹர்டகா (எஸ்டி), மனிகா (எஸ்டி), லதேஹர் (எஸ்சி), பங்கி, டால்டோங்கஞ்ச், பிஷ்ராம்பூர், சதர்பூர் (எஸ்சி), ஹுசைனாபாத், கர்வா மற்றும் பவனத்பூர் ஆகிய 43 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடந்தது.

இரண்டாம் கட்டம்

இன்று எஞ்சியுள்ள 37 தொகுதிகளாவன, ராஜ்மஹால் போரியோ (எஸ்டி), பர்ஹைத் (எஸ்டி), லிதிபாரா (எஸ்டி), பகௌர், மகேஷ்பூர் (எஸ்டி), சிகாரிபாரா (எஸ்டி), நாலா, ஜம்தாரா, தும்கா (எஸ்டி), ஜமா (எஸ்டி), ஜர்முண்டி, மதுபூர், சரத், தியோகர் (எஸ்சி), போரேயாஹத், கோடா , மஹாகாமா, ராம்கர், மண்டு, தன்வார், பகோதர், ஜமுவா (எஸ்சி), காண்டே, கிரிதிஹ், டும்ரி, கோமியா, பெர்மோ, பொகாரோ, சந்தன்கியாரி (எஸ்சி), சிந்த்ரி, நிர்சா, தன்பாத், ஜாரியா, துண்டி, பாக்மாரா, சில்லி மற்றும் கிஜ்ரி (எஸ்டி) ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று காலை மொத்தம் 14,218 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இருப்பினும், பதட்டமான 31 வாக்குச் சாவடிகளில் மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. இன்று நடைபெறும் இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 60.79 லட்சம் பெண்கள் மற்றும் 147 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 1.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் 472 ஆண்கள், 55 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 528 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும், இரு கட்டமாக நடக்கும் வாக்குகளின் எண்ணிக்கை நவம்பர் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details