டெல்லி:டெல்லியின் ரோகினிக்கு உட்பட்ட பிரசாந்த் விஹார் பகுதியில் சிஆர்பிஎப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (அக்.20) காலை 07.47 மணியளவில், சிஆர்பிஎப் பள்ளி அருகே வெடி விபத்து நிகழ்ந்ததாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக, தீயணைப்பு வண்டிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
டெல்லியில் மர்ம பொருள் வெடிப்பு? போலீசார் தீவிர விசாரணை! - DELHI BLAST TODAY
டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளி வெடிப்பு சத்தம் கேட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published : Oct 20, 2024, 10:29 AM IST
ஆனால், அங்கு எவ்வித விபத்தும் நிகழ்ந்தது போல் தெரியவில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அங்கு புகைமூட்டம் இருந்ததை அவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த நிகழ்வால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. ஆனால், சிஆர்பிஎப் பள்ளியின் சுவர், அருகில் இருந்த கடை மற்றும் அங்கு நின்று கொண்டிருந்தா கார் ஆகியவை சேதம் அடைந்திருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பாபா சித்திக்கை கொல்ல கூலிப்படையினரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை...விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!