தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா மீது பாய்ந்த போக்சோ வழக்கு.. கர்நாடகாவில் பரபரப்பு! - Karnataka Former cm BS Yediyurappa

BS Yediyurappa pocso case: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா மீது 17 வயது சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

yediyurappa
yediyurappa

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 9:41 AM IST

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீது 17 வயது சிறுமியின் தாயார் ஒருவர் பெங்களூரு சதாசிவநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "கடந்த மாதம் 2-ஆம் தேதி உதவி கேட்டு என்ற போது தனது மகளை தனி அறைக்கு அழைத்துச் சென்று முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா பாலியல் தொல்லை அளித்தார்" அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் எடியூரப்பா மீது போக்சோ(POCSO Act) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த சதாசிவநகர் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எடியூரப்பா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், இன்று இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு: தடுப்பு காவலில் ஒருவரிடம் என்ஐ விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details