தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடி உக்ரைன் பயணம்? ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? - PM Modi To Visit Ukraine Next Month - PM MODI TO VISIT UKRAINE NEXT MONTH

பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Prime Minister Narendra Modi meets with Ukraine President Volodymyr Zelenskyy (ANI Photo)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 11:07 AM IST

டெல்லி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை இரண்டரை ஆண்டுகளை தாண்டி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி அடுத்த மாதம் உக்ரைன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பயணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. கடந்த ஜூலை 8ஆம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து அலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் ரஷ்யப் பயணம் குறித்து, உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி தன் எக்ஸ் பக்கத்தில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கொடூரமான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிக மோசமான குற்றவாளியை கட்டிப்பிடித்து இருப்பதை பார்க்கையில், அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இருப்பதாக கூறினார்.

பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உக்ரைன் பாதுகாப்பு ஆலோசகர் ஆண்ட்ரி யெர்மக் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனிடையே கடந்த மாதம் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையில் தான் பிரதமர் மோடியின் உக்ரைன் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடியின் இந்த சந்திப்பின் போது போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிகள் உள்ளிட்டவைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மத்திய வெளியுறவு அமைச்சகம் பிரதமர் மோடியின் உக்ரைன் சுற்றுப்பயணத்தை உறுதிப்படுத்தவில்லை.

இதையும் படிங்க:நவி மும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்! - Mumbai Building Collapse

ABOUT THE AUTHOR

...view details