பரூச்:குஜராத்தில் 518 கிலோ எடைகொண்ட ஹெராயினை டெல்லி மட்டும் குஜராத் காவல்துறையினர் கூட்டாக இணைந்து கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் சர்வதேச மதிப்பு 5,000 கோடி இருக்கும் என்று காவல்துறையினர் அதிர வைத்துள்ளனர்.
போதை பொருளுக்கு எதிராக மத்திய அரசு '' ஜீரோ டாலரன்ஸ் '' என்ற கொள்கையுடன் சிறப்பு படைகளை அமைத்து அதிரடி ஆபரேஷன்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, மேற்கு டெல்லியில் இருந்து ரூ. 2,000 கோடி மதிப்புள்ள 200 கிலோ ஹெராயின் போதைப்பொருளை டெல்லி போலீஸார் பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து டெல்லியின் மஹிபால்பூரில் 562 கிலோ எடைகொண்ட 5,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:குண்டு துளைக்காத காரில் பாபா சித்திக் சென்றபோதும் துப்பாக்கியால் சுடப்பட்டது எப்படி?
இந்த நிலையில், குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வர் பகுதியில் ஹெராயின் பதுக்கி வைத்திருப்பது குறித்து கிடைத்த தகவலின் பேரில் குஜராத் - டெல்லி கூட்டு படையினர் விரைந்தனர். அங்குள்ள ஆவ்கார் மருந்து நிறுவனத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 518 கிலோ எடையுள்ள ஹெராயினை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அதன் சர்வதேச சந்தை மதிப்பு, 5,000 கோடி ரூபாய் எனவும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து ஹெராயின் கடத்தல் தொடர்பாக அஷ்வின் ரமணி, பிரிஜேஷ் கோதியா மற்றும் விஜய் பெசானியா ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். வட மாநிலத்தில் கடந்த சில தினங்களில் நடந்த போதை பொருள் கடத்தலில் இது மூன்றாவது பெரிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்