ரஜோரி (ஜம்மு-காஷ்மீர்): ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரின் உளவுத்துறை மற்றும் இந்திய ராணுவம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள், பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீரின் நவ்ஷேரா பகுதியில் நேற்று (செப்.08) நள்ளிரவில் இந்திய ராணுவம் நடத்திய ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, இரண்டு ஏகே47 (AK47) துப்பாக்கிகள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இராணுவத்தின் விரைவான இந்த நடவடிக்கையானது, பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வையும், தயார்நிலையையும் பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.