டெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, இன்று டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு உள்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளப்தி முர்முவிடம் மோடி வழங்கினார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக தலைமை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், நரேந்திர மோடி ஒருமனதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.