மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு மலாட் பகுதியைச் 26 வயதான மருத்துவர், ஆன்லைன் மூலம் பட்டர் ஸ்காட்ச் கோன் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். மதிய உணவுக்கு பின்னர் ஐஸ்கிரீம் சாப்பிட்ட மருத்துவருக்கு அதில் நெகத்துடன் கூடிய நீண்ட சதை கிடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அதை சோதித்து பார்த்ததில் அது மனித விரல் என்று தெரிய வந்தது. இதைக் கண்டு அதிர்ந்து போன மருத்துவர், இது குறித்து குறிப்பிட்ட ஐஸ்கிரீம் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் அளித்து உள்ளார். இருப்பினும் அந்த நிறுவனத்தின் தரப்பில் எந்த வித பதிலும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மருத்துவர் ஐஸ்கிரீமில் கிடந்த விரலை ஐஸ்கட்டிக்குள் வைத்து நேரடியாக மலாட் காவல் நிலையம் சென்று புகார் அளித்து உள்ளார். மருத்துவர் அளித்த புகாரை அடிப்படையாக கொண்டு ஐஸ்கிரீம் நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஐஸ்கிரீமில் கண்டெடுக்கப்பட்ட விரல் யாருடையது என்றும் தெரியவராத நிலையில், தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும் மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்கிரீம் நிறுவனத்திடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை (ஜூன்.12) நடந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். புகார் அளித்த மருத்துவர் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற நிலையில், மேற்கு மலாட் பகுதியில் தங்கியிருந்து தனது முதுகலை மருத்துவம் படிப்பை பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அருணாச்சல பிரதேச முதலமைச்சராக பெமா காண்டு பதவியேற்பு! பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து! - Arunachal pradesh CM oath ceremony