தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளது"-எம்பி சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு - SANJAY RAUT CRITICISES BJP

மகராஷ்டரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்கள் மனதை பிரதிபலிப்பதாக இல்லை. இந்த வெற்றி பாஜகவால் உருவாக்கப்பட்டுள்ளது என எம்பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தவ் தாக்ரே பிரிவை சேர்ந்த சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்
உத்தவ் தாக்ரே பிரிவை சேர்ந்த சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் (Image credits-Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 12:38 PM IST

மும்பை:மகராஷ்டரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்கள் மனதை பிரதிபலிப்பதாக இல்லை. இந்த வெற்றி பாஜகவால் உருவாக்கப்பட்டுள்ளது என எம்பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈடிவிபாரத்தின் செய்தியாளர்கள் அளித்த களத்தகவலின்படி மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் சற்று முன்னர் வரை பாஜக கூட்டணி 216 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 56 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. எனவே மகராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி ஆகி இருக்கிறது.

இந்நிலையில் மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள உத்தவ் தாக்ரே பிரிவை சேர்ந்த சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்,"மகாராஷ்டிரா மக்கள் மீது பாஜக எனும் கட்சி வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவு என்பது மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாக இல்லை. அதானி மற்றும் அதன் கூட்டாளிகளால் இந்த முடிவு சூழ்ச்சியாக கையாளப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையை பாஜக கைவசம் வைத்துள்ளது. அறிவிக்கப்படும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை.

இந்த தேர்தல் முடிவு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. அதானிக்கு எதிராக அண்மையில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவில் மாற்றம் ஏற்பட்டத்தில் பாஜகவுக்கு தொடர்பு உள்ளது. இந்த விஷயங்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேவிந்திர பட்நாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் சதி செய்து மக்களை திசை திருப்பி உள்ளனர். அதானி தொடர்பான சர்ச்சையில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சட்டசபை தேர்தல் முடிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன," என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details