புதுடெல்லி: ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அதிபரும், அபுதாபியின் பட்டத்து இளவரசருமான ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அலி நஹ்யான் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு நேற்றைய தினம் வந்தடைந்தார். இவர் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, அணுசக்தி மற்றும் பெட்ரோலியம் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், இன்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,'இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பராக்கா அணுமின் நிலையத்தை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் எமிரேட்ஸ் அணுசக்தி நிறுவனம் (ENEC) மற்றும் இந்திய அணுசக்திக் கழகத்திற்கும் (NPCIL) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.