தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியா - இலங்கை இடையே நடந்தது என்ன? - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த விளக்கம் - Kachchatheevu issue

Kachchatheevu issue: கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியர்களின் உரிமை குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 9:54 AM IST

Updated : Apr 1, 2024, 11:42 AM IST

டெல்லி: கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர், '1974-ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை ஒப்பந்தப்படி கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் நிலைநாட்டப்பட்டன, ஆனால் இரண்டு ஆண்டுகளில் அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன. இந்திய மீனவர்கள் உரிமைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 1974-ல் விளக்கம் அளிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன. இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதை 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தம் தடை செய்யப்பட்டது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக அப்போது பேசிய அவர், கச்சத்தீவு விவகாரத்தில், "1974 ஆம் ஆண்டில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான கடல் எல்லை வரையறைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, கச்சத்தீவு இலங்கையின் எல்லைக்குள் கொண்டு செல்லப்பட்டது.

கச்சத்தீவு எல்லையில் இன்று இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டு அவர்களது படகுகளும் சிறைபிடிக்கப்படுகின்றன. இது தொடர்பான பிரச்னை குறித்த கேள்விகள் பல முறை நாடாளுமன்றத்திலும் எழுப்பட்டுள்ளன. இது நடப்பதற்கு காரணமாக இரண்டு கட்சிகள் தான், இது தொடர்பாக கேள்விகளையும் எழுப்புகின்றனர். இவ்விவகாரத்தில் மீனவர்கள் கைது செய்யப்படும் நிலையில், சென்னையில் இருந்து கொண்டு அறிக்கை அளிப்பது மிகவும் சுலபமானது. ஆனால், அதன்பிறகு வேலை செய்ய வேண்டியவர்கள் மத்திய அரசுதான். கச்சத்தீவு விவகாரத்தில், 'காங்கிரஸ் கட்சியும், திமுகவும் இந்த விஷயத்தில் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பதை போல் அணுகியுள்ளன.

கச்சத்தீவு விவகாரத்தில், 'இந்திய மீனவர்கள் 6,184 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. மேலும், 1,175 இந்திய மீன்பிடி படகுகளும் சிறைபிடிக்கப்பட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் மற்றும் மீன்பிடித் தொழில் பிரச்னை உள்ளிட்டவைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பல முறை கேள்விகள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல முறை கடிதங்கள் மூலம் கேட்ட கேள்விகளுக்கு 21 முறை நான் பதிலளித்துள்ளேன்.

இந்த விவகாரம் திடீரென வந்த பிரச்னையல்ல. இந்த கச்சத்தீவு விவகாரம் நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, இந்தியா - இலங்கை நாடுகளிடையே நிலவும் பிரச்னை குறித்து கடிதம் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டன. இது தொடர்பான ஒரு நிலைபாட்டை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் எடுத்துள்ளன. ஆனால், அதற்கும் இவர்களுக்கும் எவ்வித பொறுப்பும் இல்லை. இந்த விவகாரத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவது உள்ளிட்ட பிரச்னைகள் என எழும்போதெல்லாம், மத்திய அரசு தான் அதைத் தீர்த்து வைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதற்கிடையே, கச்சத்தீவு உரிமை மீட்பு என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்கள் நடத்துவதாகவும் குற்றம்சாட்டினார். இதை செய்தது யார்? என நமக்கும் தெரியும். இருப்பினும், இந்நிலைமை எப்படி வந்தது என்பதை பொதுமக்கள் அனைவருக்கும் அறிந்துகொள்ளும் உரிமை உள்ளது. நீண்ட காலமாக மறைத்து வைத்து வைக்கப்பட்டு வரும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பான உண்மைகளை பொதுமக்கள் அறிந்து கொள்வதும், இது குறித்து இன்று தீர்ப்பளிக்க வேண்டியதும் மக்கள் தான்' என்று தெரிவித்துள்ளார்.

1974, ஜூனி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தின் படி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியவை பின்வருமாறு:

  • இந்தியா - இலங்கை நாட்டினருக்கு கடல் பரப்பு மற்றும் இறையாண்மை ஆகியவற்றிற்கான கட்டுப்பாடுகள் இருக்கும்.
  • இலங்கை வசம் சென்ற கச்சத்தீவுக்கு எந்த விதமான பயணத்திற்கான ஆவணங்களுடனும் செல்ல வேண்டிய கட்டாயம் இந்தியர்களுக்கு இல்லை.
  • இந்தியா - இலங்கை நாடுகளின் கப்பல்கள் பாரம்பரியப்படி கடல் நீரை பகிர்ந்து கொள்வதில் பரஸ்பரம் செய்துகொள்ள வேண்டும் என்ற விதிகள் ஒப்பந்தத்தில் இருந்ததாக விளக்கியுள்ளார்.

மேலும், அப்பகுதியில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்கு அனுமதியில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கச்சத்தீவு ஒப்பந்தத்தின் படி, இந்தியா மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்லவும், அங்கு உள்ள புனித அந்தோணியார் கோயிலில் நடக்கும் திருவிழாவில் பங்கேற்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் சில கேள்விகளை வைத்துள்ளார். அதில், 'பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

  1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
  2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
  3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே... எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க:"கச்சத்தீவை தாரைவார்த்த காங்கிரஸ்... ஒருபோதும் நம்ப முடியாத கட்சி காங்கிரஸ்" - பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு! - Katchatheevu Issue

Last Updated : Apr 1, 2024, 11:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details