தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊடக சக்கரவர்த்தி ராமோஜி ராவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்! சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி! - Ramoji Rao Funeral

மூத்த பத்திரிகையாளர், ராமோஜி குழும தலைவர் ராமோஜி ராவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Etv Bharat
Media Icon Ramoji Rao (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 11:31 AM IST

Updated : Jun 9, 2024, 12:03 PM IST

ஐதராபாத்: மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழுமத் தலைவருமான ராமோஜி ராவ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் 8ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 87. அவரது உடல் தெலங்கனா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி வளாகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தளமான ராமோஜி பிலிம் சிட்டி உருவாக்கிய பெருமைக்குரியவர் ராமோஜி ராவ். அது மட்டுமல்லாது, ஈநாடு பத்திரிகை, ஈடிவி டெலிவிஷன் மற்றும் ஈடிவி பாரத் நெட்வொர்க் போன்ற நிறுவனங்களை தொடங்கி ஊடக உலகிற்கு பல்வேறு தொண்டுகளை செய்துள்ளார்.

ராமோஜி ராவ் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராமோஜி பிலிம் சிட்டியில் வைக்கப்பட்டு இருந்த ராமோஜி ராவின் உடலுக்கு அலுவலக ஊழியர்கள், பொது மக்கள், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் பவன் கல்யாண், சிரஞ்சீவி, நாகர்ஜூனா, ஜெகபதி பாபு, இயக்குநர் ராஜமெளலி, ரவி பிரகாஷ், பிரம்மானந்தம் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

ஆந்திர பிரதேச முதலமைச்சராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இன்று (ஜூன்.9) காலை ராமோஜி ராவுக்கு இறுதி அஞ்சலி நடைபெற்றது. வீட்டில் இருந்து ஊர்வலமாக ராமோஜி பிலிம் சிட்டி, ஈடிவி பாரத், ஈடிவி, ஈநாடு பத்திரிகை அலுவலகங்கள் முன் எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடலுக்கு ஊழியர்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ராமோஜி ராவின் உடலுக்கு அரசு மாரியாதை வழங்கப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆந்திர பிரதேச முதலமைச்சர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தெலங்கனா அமைச்சர்கள் தும்மலநாகேஷ்வர ராவ், சீத்தக்கா, முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி முன்னாள் அமைச்சர்கள், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், மூத்த திரைப் பிரபலம் முரளி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

அவர்களை தொடர்ந்து ராமோஜி ராவின் மூத்த மகன் கிரன் தனது தந்தைக்கு இறுதி சடங்குகளை மேற்கொண்டார். தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர். இதையடுத்து ராமோஜி ராவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:சினிமா, மீடியா உலகின் ஜாம்பவான் ராமோஜி ராவ்.. கலையுலக வித்தகராக உருவான வரலாறு! - Ramoji Rao history

Last Updated : Jun 9, 2024, 12:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details