தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனத்தின் 2 புதிய கிளைகள் திறப்பு - நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் திறந்து வைப்பு - Shailaja Kiran

மார்கதர்சி நிறுவனத்தின் புதிய 2 கிளைகள் ஜக்தியால் மற்றும் சூர்யாபேட் பகுதியில் தொடங்கப்பட்டு உள்ளன. சூர்யாபேட் கிளையை மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் திறந்து வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 8:13 PM IST

Updated : Feb 16, 2024, 8:20 PM IST

ஜக்தியால் : மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனத்தின் 2 கிளைகள் தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மற்றும் சூர்யாபேட் பகுதியில் திறக்கப்பட்டு உள்ளது. முன்னணி சிட்பண்ட் நிறுவனமான மார்கதர்சி தனது கிளை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இரண்டு கிளைகளை திறந்து உள்ளது.

ஜக்தியால் பகுதியில் திறக்கப்பட்ட மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனத்தின் 112வது கிளையை ஈநாடு நிர்வாக இயக்குநர் கிரண் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதேபோல், சூர்யாபேட் பகுதியில் மார்கதர்சியின் 113வது கிளையை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் துவக்கி வைத்தார்.

திறப்பு விழாவில் மார்கதர்சி தலைமையகத்தின் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மார்கதர்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண், ஒரே நாளில் இரண்டு கிளைகளை திறந்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். கடந்த 60 ஆண்டுகளில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக மார்கதர்சி நிறுவனம் இயங்கி வருவதாக அவர் கூறினார்.

மார்கதர்சி நிறுவனத்தின் மீது லட்சக்கணக்கான மக்கள் நம்பிக்கை கொண்டு முதலீடுகள் செய்து வருவதாகவும், நிதி மேம்பாட்டுக்காக அலுவலக ஊழியர்கள் திறம்பட பணியாற்றி வருவதாகவும் சைலஜா கிரண் தெரிவித்தார். சிட்பண்ட் துறையில் உண்மையான மதிப்புகள் மற்றும் நம்பகத்தன்மை ஊக்கமளிப்பதாகவும், அனைத்துவித சேவைகளையும் வழங்க மார்கதர்சி பணியாளர்கள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக ஜக்தியால் பகுதியில் 112வது கிளையை ஈநாடு நிர்வாக இயக்குநர் கிரண் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தெலங்கானா மாநிலத்தில் மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனத்தின் 36வது கிளை மற்றும் ஒட்டுமொத்தமாக 112 கிளைகள் உருவாக காரணமாக இருந்த ஊழியர்களுக்கு ஈநாடு நிர்வாக இயக்குநர் கிரண் காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிங்க :வீல்சேர் தட்டுப்பாட்டால் விபரீதம்: ஏர் இந்தியா பயணி பரிதாபமாக உயிரிழப்பு! விமான நிலையத்தில் எதிரொலிக்கும் வீல்சேர் பற்றாக்குறை?

Last Updated : Feb 16, 2024, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details