தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிரா எம்எல்சி தேர்தல்: வெற்றி வாகை சூடிய பாஜக கூட்டணி! இந்தியா கூட்டணி தோல்விக்கு என்ன காரணம்? - Maharashtra MLC Election

மகாராஷ்டிரா மாநிலத்தில் 11 மேலவை உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றன. காங்கிராஸ், சிவசேனா உத்தவ் அணிக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன.

Etv Bharat
Mahayuti Alliance (ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 11:31 AM IST

மும்பை:மகாராஷ்டிர மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. மொத்தம் 11 எம்எல்சி இடங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 12 பேர் போட்டியிட்டனர். இதனால் பலத்த போட்டி நிலவியது. கட்சி மாறி வாக்களிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒவ்வொரு கட்சிகளும் தெரிவித்தன.

காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்ரேயின் சிவசேனாவின் மகா விகாஸ் கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ், சிவசேனா உத்தவ் அணி மற்றும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

காங்கிரஸின் பிரக்யா சதவ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உத்தவ் குழுவின் மிலிந்த் நர்வேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஒவ்வொரு வேட்பாளர்களும் வெற்றி பெற 22 புள்ளி76 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், பாஜக வேட்பாளர்கள் பங்கஜ முண்டே, யோகேஷ் திலகர், பரினாய் புகே, அமித் கோர்கே ஆகியோர் தலா 26 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர்.

ஜெயந்த் பாட்டில் 8 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் ஷிவராஜ்ராவ் கார்ஜே 24 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர்களான பங்கஜ முண்டே, யோகேஷ் திலகர், பரினாய் புகே, அமித் கோர்கே, சதாபாயு கோட் ஆகியோரும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் விடேகார், ஷிவராஜ் ராவ் கார்ஜே ஆகுியோரும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவின் குருபால் துமானே, பவனா கவாலி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மொத்தமுள்ள 11 இடங்களில் 9 பதவிகளை கைப்பற்றி பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்றது. மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய ஒத்திகையாக இந்த தேர்தல் காணப்பட்ட நிலையில், காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவி இருப்பது இந்தியா கூட்டணிக்கு அம்மாநிலத்தில் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:7 மாநில இடைத்தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை! 13 தொகுதிகளில் 10ல் முன்னிலை! - seven states ByElection result 2024

ABOUT THE AUTHOR

...view details