ETV Bharat / entertainment

"உன்னை நம்பு": ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்; அஜித்தின் விடாமுயற்சி டீசர் வெளியீடு! - VIDAAMUYARCHI

நடிகர் அஜித் குமாரின் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் டீஸர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளதால், அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

விடாமுயற்சி போஸ்டர்
விடாமுயற்சி போஸ்டர் (Credits - lyca productions X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2024, 7:32 AM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' (Vidaamuyarchi) மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' (Good Bad Ugly) ஆகிய 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்துள்ள விடாமுயற்சி படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

கடைசியாக அஜர்பைஜானில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாகப் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அதையடுத்து, நீண்ட நாட்களாக படம் குறித்து எந்தவித தகவலும் வராததால், அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். அதன் பிறகு இப்படத்தில் இருந்து மற்ற நடிகர்களின் அறிமுக புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.

அதில், அஜித்தின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இருந்தாலும் படம் குறித்த அப்டேட் வராததால், அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெங்கும் "கடவுளே அஜித்தே" என்ற கோஷத்தை முழக்கமிட்டு வந்தனர். குட் பேட் அக்லி படம்‌ அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்த நிலையில், விடாமுயற்சி படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: ஃபெங்கல் புயல் எதிரொலி: சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு!

இந்த நிலையில் கடந்த மாதம் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக படக்குழு அறிவித்தது. தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, விடாமுயற்சி படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்தாண்டு பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. துணிவு படம் வெளியானதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு கழித்து, தற்போது அஜித் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் அவரது
ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி, விடாமுயற்சி படத்தின் டீஸர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த டீஸரில், வழக்கமாக அஜித்தின் லுக்கில் விறுவிறு கதைக்களத்துடன், ஆக்‌ஷன் த்ரில்லர், ட்விஸ்ட் நிறைந்த படமாக இருப்பது போன்று உள்ளது. குறிப்பாக 'எல்லோரும், எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' என்ற வரிகளுடன் உள்ளது ரசிகர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.