தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மின்கட்டண குறைப்பு.. மதமாற்ற தடைச் சட்டம்.. மகாராஷ்டிரா தேர்தல் பாஜகவின் அதிரடி வாக்குறுதிகள்! - MAHARASHTRA ELECTION BJP MANIFESTO

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக தமது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. 60 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.

பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் அமித் ஷா உள்ளிட்டோர்
பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் அமித் ஷா உள்ளிட்டோர்பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் அமித் ஷா உள்ளிட்டோர் (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2024, 10:00 PM IST

மும்பை:மகாராஷ்ரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மின்கட்டண குறைப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி, முதியோர் ஓய்வூதியம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஜனரஞ்சகமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) அங்கம் வகிக்கும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களிலே உள்ள நிலையில், பாஜக தமது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன்குலே உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.. மொத்தம் 60 பக்கங்கள் கொண்ட பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

  • முதியோர் மாதாந்திர ஓய்வூதியம் 1500 -இல் இருந்து 2100 ஆக அதிகரிக்கப்படும்
  • மின் கட்டண விகிதம் 30 சதவீதம் அளவுக்கு குறைக்கப்படும்
  • கட்டாய மதமாற்றத்தை தடைச் செய்ய சட்டம் கொண்டு வரப்படும்
  • அங்கன்வாடி பணியாளர்களின் மாத ஊதியம் 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்
  • எஸ்சி, எஸ்டி மற்றும் ஓசிபி வகுப்பைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு 15 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் அளிக்கப்படும்.
  • 25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதுடன், மாணவர்களுக்கு மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • நாட்டிலேயே முதன்முறையாக மகாராஷ்டிராவில் செயற்கை நுண்ணறிவு (AI) படிப்புகளை மையமாகக் கொண்ட பிரத்யேக பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்
  • 2028 ஆம் ஆண்டுக்குள் மகாராஷ்டிரா மாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வளம்மிக்க மாநிலமாக வளர்க்கப்படும்.
  • 2027 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் மொத்தம் 50 லட்சம் பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்படுவார்கள்.
  • நாக்பூர், புனே, சர்தபதி சம்பாஜிநகர், அலியா நகர் மற்றும் நாசிக் நகரங்கள் வானுர்தி மற்றும் விண்வெளி தொழிற்நுட்பம் சார்ந்த உற்பத்தி மையங்களாக மேம்படுத்தப்படும்.
  • பாஜக கூட்டணி ஆட்சியமைந்தால், 100 நாட்களுக்குள் 'விஷன் மகாராஷ்டிரா 2029' திட்ட அறிக்கை சமர்பிக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details