ஜெய்ப்பூர் :ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வந்து உள்ளார்.
இந்நிலையில், ஜெய்ப்பூர் சென்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி அங்குள்ள புகழ்பெற்ற ஹவா மஹாலுக்கு சென்றனர். அங்கு இருவரும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தணை மேற்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்லும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அம்பர் கோட்டைக்கு செல்ல உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
அம்பர் கோட்டையில், பாரம்பரிய நடனக் கலை மூலம் பிரான்ஸ் அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாகவும், தொடர்ந்து அங்குள்ள வைக்கப்பட்டு உள்ள சிறிய கண்காட்சியை அவர் பார்வையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அம்பர் கோட்டையில் இருந்து ஜந்தர் மந்தர் வரும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பழங்கால வானியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்ப்களை பிரதமர் மோடி காண்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.