தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள அரசின் உயரிய விருதுகள் அறிவிப்பு.. யார் யாருக்குத் தெரியுமா?

கேரள அரசு மாநில அளவிலான உயரிய விருதுகளை நேற்று அறிவித்துள்ளது. இதில், இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் மற்றும் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் இடம் தேர்வாகியுள்ளனர்.

Writer MK Sanu, ISRO Chairman S Somanath, Cricketer Sanju Samson
எழுத்தாளர் எம்.கே.சானு, இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் (Credits - IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 10:55 AM IST

கேரளா (திருவனந்தபுரம்):கேரள அரசின் உயரிய விருதுகளான கேரள பிரபா விருது, கேரள ஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை கேரளா அரசு நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. அதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) தலைவர் சோம்நாத் கேரள பிரபா விருதையும், இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் கேரள ஸ்ரீ விருதையும், எழுத்தாளர் எம்.கே.சானு மிக உயரிய விருதான கேரள ஜோதி விருதையும் வென்றுள்ளனர்.

கேரள மாநிலத்தில், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட நபர்களின் பங்களிப்பைப் பாராட்டி, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் முதல் உயரிய மாநில விருதான கேரள ஜோதி ஒருவருக்கும், 2வது உயரிய மாநில விருதான கேரள பிரபா இருவருக்கும், 3வது உயரிய மாநில விருதான கேரளா ஸ்ரீ ஆறு பேருக்கும் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும், பத்ம விருதுகளின் அளவுக்கு நிகரானவை எனக் கருதப்படுகிறது.

முதல் விருதான கேரள ஜோதி விருது:

  • எம்.கே.சானு - ஆசிரியரும், எழுத்தாளருமான இவருக்கு உயரிய விருதான கேரள ஜோதி விருது வழங்கப்பட்டுள்ளது.

கேரள பிரபா விருது பெற்றவர்கள்: இந்திய தேசிய பொறியியல் அகாடமி (INAE), இந்திய தேசிய அறிவியல் அகாடமி (INSA), Aeronautical Society of India (AeSI), Astronautical Society of India (ASI) மற்றும் சர்வதேச விண்வெளி அகாடமியின் உறுப்பினர், விண்வெளி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக, இஸ்ரோ தலைவருக்கும், வேளாண்மை பிரிவில் சிறப்பாக பங்காற்றிய நபருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

  • எஸ்.சோம்நாத் இஸ்ரோ தலைவர் - விண்வெளி மற்றும் பொறியியல் துறை
  • புவனேஷ்வரி - வேளாண்மை பிரிவு

கேரள ஸ்ரீ விருது பெற்றவர்களின் விவரம்: இந்த விருது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட 6 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • சஞ்சு சாம்சன் - விளையாட்டு
  • கலாமண்டலம் விமலா மேனன் - கலை
  • டாக்டர். டி.கே.ஜெயக்குமார் - உடல்நலம்
  • நாராயண பட்டாத்திரி - எழுத்து எழுதுதல்
  • ஷைஜா பேபி - சமூக சேவை, ஆஷா பணியாளர்
  • வி.கே மேத்யூஸ் தொழில்- வணிகம்

இதையும் படிங்க: இந்திய முறை சிகிச்சைகாக பெங்களூரு வந்த பிரிட்டன் அரசர் சார்லஸ்.. பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details