பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் நசீர் ஹுசைன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என அவையில் கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவையில் இருந்த பாஜகவினருக்கும், காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரனமாக சட்டசபை சிறுது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக பெஙக்ளூரு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ஆடியோ முடக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை போலீசார் துவக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகவில் நேற்று (பிப்.27) மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 3 இடங்களை கைப்பற்றியது.
இதையடுத்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கம் சட்டப்பேரவையில் முழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம் பாகிஸ்தா ஜிந்தாபாத் என்று கூறப்படவில்லை என்றும் மாறாக நசீர் சார் ஜிந்தாபாத் எனக் கூறப்பட்டதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் இது தொடர்பான வீடியோவை பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மல்வியா சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும், முழக்கம் எழுப்பியவர்களை கைது செய்யக் கோரியும் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா, குரல் பதிவு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், வீடியோவில் அப்படி யாரும் முழக்கம் எழுப்பி இருந்தது உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பாஜக கோரிக்கை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொணர வேண்டும் என மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி நசீர் ஹுசைன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதேபோல் இந்த விவகாரத்தில் விரைவாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என பாஜகவினர் விதான் சவுதா காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க :மறைந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் தாய் செயற்கை கருத்தரித்தல் முறையில் கர்ப்பம்!