டெல்லி :நாடு முழுவதும் தசரா பண்டிகையானது நேற்று (அக்.12) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், டெல்லி, செங்கோட்டையில் உள்ள மாதவ் தாஸ் பூங்காவில் ஸ்ரீராம் லீலா சங்கம் சார்பில் 211 அடி உயரம் கொண்ட ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இந்த உருவ பொம்மை தான் இந்தியாவின் மிகப்பெரிய உருவ பொம்மை ஆகும்.
இந்த நிகழ்வினில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று (அக்.12) இரவு நடைபெற்ற இந்த தசரா கொண்டாட்டத்தில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் ராமர், லட்சுமணன் மற்றும் அனுமன் வேடங்களில் இருந்த நாடக கலைஞர்களின் நெற்றியில் திலகமிட்டு வணங்கினர்.
அதன் தொடர்ச்சியாக, தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாதவ் தாஸ் பூங்காவில் ராவணன், மேகநாதர் மற்றும் கும்பகர்ணன் உருவ பொம்மைகள், குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் முன்னிலையில் எரிக்கப்பட்டது.
இதையும் படிங்க:மைசூர் தசரா கொண்டாட்டம்: கவர்ச்சிகரமான காட்சிகளால் ஈர்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள்!