தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கருத்து கூறினால் பத்திரிகையாளர் மீது கிரிமினல் வழக்கு போடுவதா? - உ.பி. அரசை விளாசிய உச்ச நீதிமன்றம் - Freedom To Express

ஜனநாயக நாடுகளில் ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மதிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19 (1) (a) பிரிவின் கீழ் பத்திரிகையாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்) (Credits - Getty Images)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2024, 10:59 PM IST

டெல்லி:ஜனநாயக நாடுகளில் ஒருவரின் கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்தின் சாராம்சத்தை உச்ச நீதிமன்றம் எடுத்துரைத்தது. கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும், பத்திரிகையாளர் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு நிர்வாகத்தில் நிலவும் சாதிய போக்குகள் தொடர்பாக கட்டுரை வெளியிட்டதற்காக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாய் என்பவர் தொடுத்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் மேற்கூறிய கருத்துகளை தெரிவித்தது.

இதையும் படிங்க:இமாச்சலப் பிரதேசத்தில் கழிப்பறைக்கு ரூ.25 வரியா? பாஜக ஆவேசம்; முதல்வர் மறுப்பு

நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "ஜனநாயக நாடுகளில் ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மதிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19 (1) (a) பிரிவின் கீழ் பத்திரிகையாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு பத்திரிகையாளரின் எழுத்துகள் அரசாங்கத்தை விமர்சிப்பதாக கருதப்படுவதால், எழுத்தாளர் மீது கிரிமினல் வழக்குகள் போடப்படக்கூடாது." என்றனர்.

மேலும், இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரப் பிரதேச அரசு மற்றும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பத்திரிக்கையாளர் அபிஷேக் உபாத்யாய், உத்தரப் பிரதேசத்தில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகள் மீது சாதிய கண்ணோட்டத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். இந்த கட்டுரை வெளியான பிறகு, லக்னோ போலீசார் அவர் மீது வழக்குத் தொடுத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details