தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜார்கண்ட் முதலமைச்சராகிறார் ஹேமந்த் சோரன்! சம்பை சோரன் ராஜினாமா! - Jharkhand CM Hemant Soren - JHARKHAND CM HEMANT SOREN

ஜார்கண்ட் முதலமைச்சராக விரைவில் ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நில மோசடி வழக்கில் கைதான ஹேமந்த் சோரன் ஜாமீனில் வெளிவந்த நிலையில் விரைவில் பதவியேற்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Etv Bharat
Hemant Soren (ANI Photo)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 7:47 PM IST

ராஞ்சி: சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்த போது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

விசாரணைக்குப் பிறகு ஜாா்க்கண்ட் முன்னாள் முதலமைச்ச ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31ஆம் தேதி கைது செய்தது. இதனிடையே ஹேமந்த் சோரன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது கட்சியின் மூத்த தலைவா் சம்பை சோரன் ஜாா்க்கண்ட் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு ஜார்க்கண்ட் நீதிமன்றம் சோரனுக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில், ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் சம்பை சோரன் வீட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்களின் குழு தலைவராகத் ஹேமந்த் சோரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே சம்பை சோரன் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து கடிதம் வழங்கினார். இதையடுத்து விரைவில் ஜார்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரான் பதவியேற்க உள்ளார்.

இதையும் படிங்க:ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை! - Zika virus

ABOUT THE AUTHOR

...view details