புதுடெல்லி:அக்டோபர் மாதத்தில் ஒட்டு மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் 9 சதவிகிதம் அதாவது ரூ.1.87 கோடி அதிகரித்துள்ளது. உள்ளூர் வர்த்தக பரிமாற்றத்திலும் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரித்திருக்கிறது.
மாதாந்திர ஜிஎஸ்டி வரிவருவாய் குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவலில்,"மத்திய ஜிஎஸ்டி வரிவருவாய் அக்டோபர் மாதம் ரூ.33,821 கோடியாக இருந்தது. மாநில ஜிஎஸ்டி வருவாய் ரூ.41,864 கோடியாக இருந்தது. ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி ரூ.99,111 கோடியாகவும், செஸ் ரூ.12,550 கோடியாகவும் இருந்தது.
மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் 8.9 சதவிகிதம் அதாவது ரூ.1.87 லட்சம் கோடியாக அக்டோபர் மாதம் அதிகரித்திருக்கிறது. 2023ஆம் ஆண்டில் இதே அக்டோபர் மாதத்தில் ரூ.1.72 லட்சம் கோடி ரூபாய் ஆக இருந்தது. உள்ளூர் பரிமாற்றத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் 10.6 சதவிகிதம் அதிகரித்து ரூ.1.42 லட்சம் கோடியாக இருந்தது.இறக்குமதி மீதான வரி விதிப்பு 4 சதவிகிதம் அதிகரித்து ரூ.45,096 கோடியாக இருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் ரீஃபண்ட் மதிப்பு ரூ.19,306 கோடியாக இருந்தது.கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 18.2 சதவிகிதம் அதிகமாகும். ரீஃபண்ட் தவிர்த்து மொத்த ஜிஎஸ்டி வருவாய் 8 சதவிகிதம் அதிகரித்து ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது,"எனக் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்