தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் மகாராஷ்டிரா முதலமைச்சர் அசோக் சவான் காங்கிரசில் இருந்து விலகல்! என்ன காரணம்? - Ashok Chavan Resigns From Congress

Ashok Chavan resigns congress: முன்னாள் மகாராஷ்டிர முதலமைச்சர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக அறிவித்து உள்ளார். விரைவில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 3:09 PM IST

Updated : Feb 13, 2024, 2:08 PM IST

மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான். இந்நிலையில், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலை சந்தித்த அவர், தனது ராஜினா கடிதத்தை வழங்க்கினார். முன்னர் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த அசோக் சவான், 1987 மற்றும் 1989 மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு மீண்டும் மக்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், கடந்த 1986 முதல் 1995 வரை மகராஷ்டிர மாநில இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளார். கடந்த 1999 முதல் 2014ஆம் ஆண்டு மே வரை மூன்று முறை மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினராக அங்கம் வகித்து உள்ளார்.

மேலும் கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி முதல் நவம்பர் 9, 2010 வரை மகாராஷ்டிர முதலமைச்சராகவும் பதவி வகித்தவர் அசோக் சவான். ஆதர்ஷ் வீட்டுவசதி சங்க ஊழல் தொடர்பாக அசோக் சவானை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பாஜக வேட்பாளர் பிரதாப் பாட்டீலிடம் தேர்தல் தோல்வியை தழுவிய அசோக் சவான் அதன்பின் பெரியளவில் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் இருந்த அசோக் சவான் அதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் அசூர வேகத்தில் தனக்காக இடத்தை பூர்த்தி செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அசோக் சவானின் தந்தை சங்கரராவ் சவான், மகாராஷ்டிர முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தெற்கு மும்பை எம்.பி மிலிண்ட் தியாரோ காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், அவரைத் தொடர்ந்து அசோக் சவானும் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய புள்ளிகள் வெளியேறி பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இணைவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்று பெரிய தலைவராக காணப்பட்ட அசோக் சவான் ராஜினாமா அறிவித்து இருப்பது அம்மாநிலத்தில் காங்கிரசுக்கு பெரிய பின்னடைவு தான்.

இதையும் படிங்க :ரோஜ்கர் மேளா: நாடு முழுவதும் இன்று 1 லட்சம் பேருக்கு பணி ஆணை வழங்கும் பிரதமர்!

Last Updated : Feb 13, 2024, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details