துங்கர்பூர் :வடமாநிலங்களில் இன்று (மார்ச்.25) ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வர்ணங்களை மற்றவர் மீது பூசி மக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டம் பிலுடா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் ஹோலி பண்டிகை நாளில் விசித்திரமான ஒன்றை நீண்ட காலமாக கடைபிடித்து வருகின்றனர்.
அதாவது ஹோலி பண்டிகையில் வர்ணங்களுக்கு பதிலாக மற்றவர் மீது கற்களை வீசி விநோதமாக கொண்டாடி மகிழ்கின்றனர். இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு கிராம மக்கள் ஒருவர் மற்றவர் மீது கற்களை வீசி ஹோலி பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர். நூற்றாண்டு காலமாக பழங்குடியின மக்கள் இந்த சடங்குகளை பின்பற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.