தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Fact Check; காங்கிரஸை புகழ்ந்து பேசினாரா ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்? உண்மை என்ன? - Mohan Bhagwat Praising Congress

Mohan Bhagwat Praising Congress: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், காங்கிரஸ் கட்சியை புகழ்ந்து பேசுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த பதிவின் மூலம் அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த உண்மைத் தன்மையை சரிபார்ப்போம்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் காங்கிரஸ் கட்சியை புகழ்ந்தது பேசுவது போன்ற வீடியோ
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் காங்கிரஸ் கட்சியை புகழ்ந்தது பேசுவது போன்ற வீடியோ (Photo credits - ETV Bharat Tamil Nadu)

By PTI

Published : May 28, 2024, 10:11 PM IST

Updated : Jun 6, 2024, 6:19 PM IST

டெல்லி: இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பங்களித்ததற்காக காங்கிரஸை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் பாராட்டுவது போன்ற வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர். இது குறித்து பிடிஐ உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டபோது, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட அந்த வீடியோ கிளிப் 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோவின் ஒரு பகுதி என்பதைக் கண்டறியப்பட்டது. 2018ஆம் ஆண்டில் அவர் பேசியிருந்த உரையின் ஒரு சிறு பகுதியே சமீபத்தில் பகிரப்பட்டுள்ளது.

உரிமைகோரல்:ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்ததற்காக காங்கிரஸை பாராட்டிப் பேசுவது போன்ற ஒரு வீடியோவை பேஸ்புக் பயனர் ஒருவர் கடந்த மே 22ஆம் தேதி பகிர்ந்திருந்தார்.

அவர் பகிர்ந்திருந்த அந்தப் பதிவில் “மோகன் பகவத் காங்கிரஸ் கட்சியை பாராட்டுகிறார்” எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இடுகைக்கான இணைப்புமற்றும் அதன் ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது:

Screengrabs from the viral video and an original youtube video from 2018. (Credits - PTI)

விசாரணை:இந்த விசாரணையின்போது, வீடியோவை InVid Tool Search மூலம் இயக்கி பார்த்ததில் பல கீ ஃப்ரேம்கள் (key frame) இருப்பதை குழு கண்டுபிடித்தது. அதில் ஒரு கீ ஃப்ரேமை மட்டும் கூகுள் லென்ஸில் இயக்கி பார்த்ததில், அந்த குறிப்பிட்ட வீடியோ இதே கூற்றுடன், மேலும் பல பதிவுகளாக இருந்ததை குழு கண்டறிந்தது.

அத்தகைய இரண்டு இடுகைகளை இங்கேபார்க்கலாம்.

Screengrabs from the social media posts making claims (Credits - PTI)

தேடல் முடிவுகளை மேலும் ஆய்வு செய்ததில், 2018ஆம் ஆண்டு செப்.18-ம் தேதியன்று, இந்தியன் எக்ஸ்பிரஸின் அதிகாரப்பூர்வ பக்கத்தால் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவை குழு கண்டறிந்தது.

இந்த வீடியோவின் கேப்ஷனில், “இந்த நாட்டு மக்களை சுதந்திரப் பாதையில் கொண்டு சென்றதற்கு காங்கிரஸின் சித்தாந்தம் முக்கியப் பங்கு வகித்தது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இடுகைக்கான இணைப்பு இங்கே உள்ளது மற்றும் அதன் ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது

Screengrab showing Mohan Bhagwat's speech in 2018 (Credits - PTI)

இந்நிலையில் இந்த வீடியோ தான், சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அதே வீடியோ என்பதை குழு கண்டறிந்தது.

இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக்கொண்டு, முக்கிய வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடியபோது, 2018ஆம் ஆண்டு செப்.18-ம் தேதி NDTV இன் அதிகாரப்பூர்வ சேனலால் பதிவேற்றப்பட்ட யூடியூப் வீடியோவை குழு கண்டறிந்தது.

அந்த வீடியோவின் விளக்கத்தில், “டெல்லியில் இன்று மூன்று நாள் மாநாட்டை தொடங்கிய ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவரான மோகன் பகவத், அதன் விமர்சகர்களில் ஒன்றை குறித்து சமரச தொனியில் பேசியிருந்தார். “நாட்டில் ஒரு மாபெரும் சுதந்திர இயக்கம் காங்கிரஸால் உருவானது. மேலும், பல தியாகங்களை செய்து தற்போது வரை நம்மை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் மகத்தான ஆளுமைகளை அது பெற்றெடுத்தது. இந்த இயக்கம் சாதாரண மக்களை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியது. சுதந்திரத்தை அடைவதில் இந்த இயக்கம் பெரும் பங்காற்றியது” எனக் கூறியிருந்தார்.

வீடியோவிற்கான இணைப்புஇங்கே உள்ளது மற்றும் அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது:

Screengrab of a news article on Mohan Bhagwat's speech (Credits - PTI)

இரண்டு வீடியோக்களின் காட்சிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு படம் கீழே உள்ளது, அவை ஒரே மாதிரியானவை என்பதைக் காட்டுகிறது.

நாட்டில் ஒரு மாபெரும் சுதந்திர இயக்கம் காங்கிரஸால் உருவானது. மேலும், பல தியாகங்களை செய்து தற்போது வரை நம்மை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் மகத்தான ஆளுமைகளை அது பெற்றெடுத்தது. இந்த இயக்கம் சாதாரண மக்களை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியது. சுதந்திரத்தை அடைவதில் இந்த இயக்கம் பெரும் பங்காற்றியது” என ஆர்எஸ்எஸ் தலைவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டுக்கு முந்தைய பழைய வீடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் தவறான கூற்றுகளுடன் பகிரப்பட்டதை குழு கண்டறிந்தது.

உரிமைகோரல்:ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸின் பங்களிப்பை பாராட்டினார்.

உண்மை:வீடியோ 2018க்கு முந்தையது.

முடிவுரை:இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு காங்கிரஸின் பங்களிப்பிற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாராட்டு தெரிவித்த வீடியோவை பல சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்துள்ளனர். அது குறித்த விசாரணையில், 2018ஆம் ஆண்டிற்கு முந்தைய பழைய வீடியோ சமூக ஊடகங்களில் தவறான கூற்றுடன் பகிரப்பட்டதை பிடிஐ உண்மை கண்டறியும் குழு கண்டறிந்தது.

Note: This copy has been published by PTI as part of Shakti Collective and has been republished by ETV Bharat.

இதையும் படிங்க: Fact Check; 'இந்தியாவிற்கு பாரமாக இருக்க வேண்டாம், பாகிஸ்தான் சென்று பிச்சை எடுங்கள்'.. முஸ்லீம்களை சாடினாரா யோகி ஆதித்யநாத்? உண்மை என்ன? - Clipped Video Of Yogi Adityanath

Last Updated : Jun 6, 2024, 6:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details