ஹைதராபாத்:ஜன் சுராஜ் (Jan suraaj) அமைப்பின் தலைவரும், தேர்தல் வியூக ஆலோசகர் மற்றும் அரசியல்வாதியுமான பிரசாந்த் கிஷோர், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக போலி கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்தக் கடிதம் போலியானது என்பதை கிஷோரின் அலுவலகம் பூம்-க்கு (boom) உறுதிப்படுத்தியதோடு, ஜான் சுராஜ் இந்த உரிமைகோரலை தன் எக்ஸ் தளத்தின் மூலம் மறுத்துள்ளது.
நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சுமார் 300 இடங்களைப் பிடிக்கும் என சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு பேட்டியில் கிஷோர் கூறியிருந்தார். இதற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர். தொடர்ந்து கிஷோர், இன்ஸ்டாகிராமில் பத்திரிகையாளர் கரண் தாபருடனான தனது நேர்காணலைக் குறிப்பிட்டு, “தண்ணீர் அருந்துவது நல்லது, ஏனெனில் அது மனதையும், உடலையும் நீரேற்றமாக வைத்திருக்கும். இந்தத் தேர்தல் முடிவை பற்றிய எனது மதிப்பீட்டால் வருத்தம் அடைந்தவர்கள் ஜூன் 4ஆம் தேதி, அதிக அளவு தண்ணீரை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். மே 2, 2021 -யும், மேற்கு வங்கத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என பதிவிட்டிருந்தார்.
இந்தச் சூழலில் பரவி வரும் வைரல் கடிதத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பிரசாந்த் கிஷோரை பாஜகவின் தேசிய தலைமை செய்தித் தொடர்பாளராக நியமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “பாஜகவின் தேசியத் தலைவர் ஸ்ரீ ஜகத் பிரகாஷ் நட்டா, பாஜகவின் தேசிய தலைமை செய்தித் தொடர்பாளராக ஸ்ரீ பிரசாந்த் கிஷோரை நியமித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது" என கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை முகநூல் (Facebook) பயனர் ஒருவர் தன் முகநூல் பக்கத்தில், “ஜன் சுராஜ் இயக்கத்தின் நயவஞ்சகர் பிரசாந்த் கிஷோருக்கு வாழ்த்துகள்.. அவர் பீகாரை மாற்றத் தொடங்கினார், ஆனால் அவரே தற்போது மாறிவிட்டார்.. அவர் தொடங்கிய இடத்தை அடைந்துவிட்டார்..” எனும் பதிவுடன் பகிர்ந்திருந்தார்.
உண்மை சரிபார்ப்பு:வைரலான இந்த கடிதம் போலியானது என்பதையும், பிரசாந்த் கிஷோர் பாஜகவில் சேரவில்லை என்பதையும் உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது. இந்த வைரல் கடிதம் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளை கூகுல் சர்ச் (google search) மூலம் தேடி பார்த்ததில், அது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் காண முடியவில்லை.
இந்த வைரல் கடிதம் குறித்த தகவலை மறுத்தும், அதனை பகிர்ந்து கொண்ட காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷை குற்றம் சாட்டியும், கிஷோர் தன் ஜான் சுராஜின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.