தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மீதான தடை உறுதி"- டெல்லி உயர் நீதிமன்றம்! - Arvind Kejriwal bail - ARVIND KEJRIWAL BAIL

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணம் மோசடி வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட தடையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Etv Bharat
File photo of Delhi Chief Minister Arvind Kejriwal (ANI Photo)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 3:02 PM IST

டெல்லி:மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 21ஆம் தேதி வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இன்று (ஜூன்.25) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின் அமர்வில் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்படுகிறார். முன்னதாக ஜாமீனுக்கு தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஎம் சிங்வி கோரினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, எஸ்விஎன் பாட்டி தலைமையிலான அமர்வு, பொதுவாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைக்காது என்றும், விசாரணையிலேயே தீர்ப்பு வெளியிடப்படும். ஆனால், ஜாமீனுக்கு எதிராக தடை விதிக்கப்பட்ட மனுவின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்து இருப்பது வழக்கத்திற்கு மாறான செயல் என்பதால் பொறுத்திருந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனர்.

மேலும் வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை ஜூன் 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில், நாளை (ஜூன்.26) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே மக்களவை தேர்தல் பிரசாரத்திற்கு ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால், பின்னர் ஜூன் 2ஆம் தேதி மீண்டும் திகார் சிறையில் சரணடைந்தார்.

இதையும் படிங்க:லண்டன் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! கடைசியில் பயணியே கைது! என்ன நடந்தது? - Air India Flight Bomb Threat

ABOUT THE AUTHOR

...view details