தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டானா புயல்: 28 ரயில்கள் ரத்து! தமிழ்நாட்டில் எத்தனை? - CYCLONE DANA TRAINS CANCEL

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு செல்லும் 28 விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் இரு தினங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2024, 8:31 PM IST

ஹைதராபாத்:வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை புயலாக மாறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 'டானா' என்று பெயரிடப்பட்டுள்ள இப்புயல் ஒடிசாவின் பூரிக்கும், மேற்கு வங்க மாநிலத்தின் சாகர் தீவுக்கும் இடையே வியாழக்கிழமை (அக்.24) இரவு கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், எதிர்திசையில் தென்மாநிலங்களில் இருந்து ஒடிசா, மேற்கு வங்கத்துக்கும் இயக்கப்படும் 28 விரைவு, அதிவிரைவு ரயில்கள் நாளை(அக்.23) மற்றும் நாளை மறுநாள் (அக்.24) ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரத்தாகும் ரயில்கள் விவரம்:

ரயில் எண் புறப்படும் இடம் சேருமிடம் ரத்தாகும் தேதி
22603 கராக்பூர் விழுப்புரம் அக். 24
12841 ஷாலிமார் சென்னை சென்ட்ரல் அக். 24
12663 ஹவுரா திருச்சிராப்பள்ளி அக்.24
12839 ஹவுரா சென்னை சென்ட்ரல் அக்.24
06090 சந்த்ராகாச்சி சென்னை சென்ட்ரல் அக்.24
22504 திப்ரூகர் கன்னியாகுமரி அக்.23
12840 சென்னை சென்ட்ரல் ஹவுரா அக்.23
12868 புதுச்சேரி ஹவுரா அக்.23
22826 சென்னை சென்ட்ரல் ஷாலிமார் அக்.23
12897 புதுச்சேரி புவனேஸ்வர் அக்.23
12842 சென்னை சென்ட்ரல் ஹவுரா அக்.24
22808 சென்னை சென்ட்ரல் சந்த்ராகாச்சி அக்.24
06095 தாம்பரம் சந்த்ராகாச்சி அக்.24
06087 திருநெல்வேலி ஷாலிமார் அக்.24
22606 திருநெல்வேலி புருலியா அக்.23
06089 சென்னை சென்ட்ரல் சந்த்ராகாச்சி அக்.23
22503 கன்னியாகுமரி திப்ரூகர் அக்.23

அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 17 விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் உட்பட மொத்தம் 28 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை NTES/ IRCTC இணையதளம் மற்றும் செயலியில் பயணிகள் அறியலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details