பிஜாபூர் :சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் முதல் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டு இருந்த நிலையில், பைரம்கர்க் அடுத்த சின்ஹா கிராமத்தில் திடீரெனெ ஐஇடி வெடிகுண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் உதவி கமாண்டோ வீரர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து படுகாயம் அடைந்த வீரரை சக வீரர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த பஸ்டர் மாவட்ட நக்சல்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாக காணப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்தில் கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.