தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு வெளியீடு - கிரிமினல் வழக்குகள் குறித்து வேட்புமனுவில் தகவல்! - Rahul Gandhi Assets List

Lok Sabha Election 2024: வயநாடு மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்தார். வேட்புமனு பிரமாண பத்திரத்தில் அளிக்கப்பட்டு உள்ள தகவலின் படி ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது. ஏறத்தாழ 20 கோடியே 39 லட்ச ரூபாய் ராகுல் காந்தியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பாக காட்டப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 12:39 PM IST

வயநாடு :கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்தார். இந்நிலையில், வேட்புமனு பிரமாண பத்திரத்தில் ராகுல் காந்தி வழங்கிய சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, கடந்த 2022 -23 நிதி ஆண்டில் ஒரு கோடியே 2 லட்சத்து 78 ஆயிரத்து 680 ரூபாய் வருவாயாக ராகுல் காந்தி கணக்கு காட்டி உள்ளார். அதற்கும் முன் கடந்த 2021- 22 நிதி ஆண்டில் ராகுல் காந்தியின் மொத்த வருவாயாக 1 கோடியே 31 லட்சத்து 4 ஆயிரத்து 970 ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கையில் ரொக்கமாக 55 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், வங்கிக் கணக்கில் 26 லட்சத்து 25 ஆயிரத்து 157 ரூபாய் உள்ளதாகவும் பிரமாண பத்திரத்தில் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். மேலும் யங் இந்தியா நிறுவனத்தில் 100 ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 900 பங்குகள் என 1 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பிலான பங்குகள் உள்ளதாகவும், பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 25 நிறுவனங்களில் 4 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரத்து 519 ரூபாய் மதிப்பிலான பங்குகளை கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் மூலம் 3 கோடியே 81 லட்சத்து 33 ஆயிரத்து 572 ரூபாய் கொண்டு இருப்பதாகவும், 15 லட்சத்து 21 ஆயிரத்து 740 ரூபாய் மதிப்பிலான தங்க பத்திரங்கள், மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் 61 லட்சத்து 52 ஆயிரத்து 426 ரூபாய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 42 ஆயிரத்து 850 ரூபாய் மதிப்பிலான தங்கம் வைத்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். மொத்தமாக 9 கோடியே 24 லட்சத்து 59 ஆயிரத்து 264 ரூபாய்க்கு அசையும் சொத்துகள் வைத்திருப்பதாக பிராமாண பத்திரத்தில் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். இதுதவிர அசையா சொத்துகளாக சுல்தான்பூரில் தனது சகோதரியுடன் பிரியங்கா காந்தியுடன் இணைந்து விவசாய நிலம் வைத்து இருப்பதாகவும் அதன் சொத்து மதிப்பு 2 கோடியே 10 லட்சத்து 13 ஆயிரத்து 598 ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அரியானா மாநிலம் குருகிராமில் 5 ஆயிரத்து 838 சதுர அடி பரப்பளவில் வணிக கட்டிடம் கொண்டு இருப்பதாகவும் அதன் மதிப்பு 9 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவித்து உள்ளார். ஒட்டுமொத்தமாக 11 கோடியே 15 லட்சத்து 2 ஆயிரத்து 598 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை கொண்டு இருப்பதாக ராகுல் காந்தி பிரமாண பத்திரத்தில் தெரிவித்து உள்ளார்.

மேலும், 49 லட்சத்து 79 ஆயிரத்து 184 ரூபாய் கடன் வைத்து இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். ஒட்டுமொத்தமாக ராகுல் காந்தியிடம் 20 கோடியே 39 லட்சத்து 61 ஆயிரத்து 862 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் நிதிமன்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டு உள்ளதும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் - மீட்பு பணி தீவிரம்! - Boy Fell Borewell At Karnataka

ABOUT THE AUTHOR

...view details