டெல்லி:மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ (Central Board of Secondary Education) பாடத்திட்டம் தேசிய அளவில் அமலில் உள்ளது. இது மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் 2023-2024 கல்வியாண்டில் பயிலும் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதில் 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, வினாத்தாள் திருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இந்நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும் என்று, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவர்கள்Cbse.nic.in, cbse.gov.in அல்லதுcbseresults.nic.inஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வின் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.