மும்பை:மகாராஷ்டிர மாநிலம் மும்பை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் கேசர் கிராமத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற பயணிகளை ஏற்றிக் கொண்டு பந்தர்பூர் நோக்கி தனியார் பேருந்து சென்றுள்ளது. அதேபோல் எதிர்திசையில் டிராக்டர் ஒன்று வந்து கொண்டு இருந்தது. மும்பை - லோனவாலா அருகே சாலையில் சென்று கொண்டு இருந்த இரண்டு வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் சாலையை விட்டு வெளியேறிய டிராக்டர் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திறகு விரைந்த போலீசார் விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்தையும் பள்ளத்தில் கவிழுந்த டிராக்டரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் தெரிய வராத நிலையில், விபத்தால் அப்பகுதியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரேன் உதவியுடன் பேருந்து மற்றும் டிராக்டரை மீட்ட் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
ஏறத்தாழ மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள் எறும்புக் கூட்டம் போல் மெல்ல நகரத் தொடங்கின. விபத்து எப்படி நடந்தது எனத் தெரியவராத நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனங்கள் விபத்துக்குள்ளானதா அல்லது வேறெதும் காரணமா என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் கைது! என்ன நடந்தது? - Rakul Preet Singh Brother arrest