புதுடெல்லி:டெல்லியின் ரோஹினி அருகே பிராசாந்த் விஹாரில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ் வளாகத்தின் அருகே குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு வெடித்ததாக டெல்லி தீயணைப்புத்துறை சேவை பிரிவு தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து பேசிய தீயணைப்பு துறையினர்,"பிரசாந்த் விஹார் பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த தாக முற்பகல் 11.48க்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே நான்கு தீயணைப்பு வண்டிகளுடன் நாங்களும் சம்பவ இடத்துக்கு சென்றோம். குண்டு வெடிப்பு சம்பவத்தில் அந்த இருந்த ஆட்டோ ஒட்டுநர் காயம் அடைந்துள்ளார்.இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது," என்று கூறினர்.
போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரசாந்த் விஹார் பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது," என்று கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் பிரசாந்த் விஹார் பகுதியில் சிஆர்பிஎஃப் பள்ளிகக்கு வெளியே குண்டு வெடிப்பு ஒன்று நேரிட்டது. அதேபோல இன்றைய குண்டு வெடிப்பும் நேரிட்டிருக்கிறது. ஒரு இனிப்பு கடைக்கு எதிரே மிகவும் குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுதான் வெடித்துள்ளது.ஆரம்ப கட்ட விசாரணைக்குப் பின்னரே இந்த குண்டு வெடிப்பில் யாருக்கு தொடர்பிருக்கிறது என தெரியவரும்,"என போலீசார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.